Homeசெய்திகள்தேர்தல் 2026பசுமை வாக்குச்சாவடி - வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி...

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக “பசுமை வாக்குச்சாவடி” (Green Polling Booths) திட்டம் கவனம் பெற்றுள்ளது.பசுமை வாக்குச்சாவடி - வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆட்டந்தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி, சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. இவ்வாக்குச்சாவடி முழுவதும் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தென்னை ஓலைகள், வாழை மரங்கள், பனை ஓலைகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி வாக்குச்சாவடி அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க வாழைமர தோரணங்கள் மற்றும் பசுமை நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்காளர்கள் சௌகரியமாக காத்திருந்து வாக்களிக்க முடிகிறது.பசுமை வாக்குச்சாவடி - வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி...மேலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுக்கும்படி தென்னங்கீற்றால் உருவாக்கப்பட்ட செல்ஃபி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்பானையில் குடிநீர், மண் அலங்காரப் பொருட்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட மயில் வடிவங்கள் போன்ற பாரம்பரிய கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை கிராமப்புற இயற்கைச் சூழலை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.

முக்கியமாக, இந்த வாக்குச்சாவடியில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

100 சதவீத வாக்குப்பதிவை நோக்கமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகளில் இது ஒன்றாகும். பசுமை வாக்குச்சாவடி முயற்சி வாக்காளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி, வாக்களிக்கும் விழிப்புணர்வை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

MUST READ