Homeசெய்திகள்தேர்தல் 2026அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் - நயினார்

அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் – நயினார்

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் தனது தொகுதி மாற்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் - நயினார் நெல்லை தொகுதியில் பலமுறை போட்டியிட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இம்முறை கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிடுவதால் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, வரும் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் அவர் கூறினார்.

“நான் எங்கு போட்டியிட்டாலும், திருநெல்வேலி எனக்கு எப்போதும் செல்லப்பிள்ளை தான்” என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், கூட்டணி ஒற்றுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

we-r-hiring

மேலும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகும் என்ற எந்த காரணமும் இல்லை என்றும், விரைவில் முழு பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் – பெ.சண்முகம் பேட்டி

MUST READ