மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அயப்பாக்கம் ஊராட்சியில் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பெண்கள் ” “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என கோலமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி அயப்பாக்கம் ஊராட்சியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவும் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

அயப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, வீடுகளின் முன்பாக “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்”, “மகளிர் விடியல் பயணம்”, “மகளிர் உரிமை தொகை”, “எல்லோருக்கும் எல்லாம்” போன்ற வாசகங்களை கோலமாக எழுதி, உதயசூரியன் சின்னத்தையும் வரைந்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
மேலும், ஒவ்வொரு வீட்டு முன்பும் மலர் தூவி ஆரத்தி எடுத்து வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளை உற்சாகமாக வரவேற்றனர். இதனால் அப்பகுதியில் தேர்தல் பரப்புரை உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
பிரச்சாரத்தின் போது காரப்பாக்கம் கணபதி மற்றும் டி.ஆர். பாலு இணைந்து வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னதாக, அவர்கள் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் பிரச்சாரத்தை தொடங்கினர். மொத்தத்தில், மதுரவாயல் தொகுதியில் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் மக்கள் ஆதரவைப் பெற்று உற்சாகமாக நடைபெற்றது.
ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி
