Homeசெய்திகள்தேர்தல் 2026தமிழர்கள் பாஜகவிற்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?

தமிழர்கள் பாஜகவிற்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?

-

- Advertisement -

தமிழர்களின் உயிர்மூச்சாக இருந்து வரும் மொழி, மதச்சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவை புறக்கணித்து வருகின்றனர்.தமிழர்கள் பாஜகவிற்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?​தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது ​தமிழக அரசியலின் ஆணிவேராக இருந்து வருகிறது. பாஜகவின் ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற கொள்கையை முன்னெடுத்து மறைமுகமாக இந்தியை திணித்து வருகிறார்கள்.  புதிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தமிழைப் பின்னுக்குத் தள்ளுகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் பண்பாடு என்பது தனித்துவமான திராவிடப் பண்பாடு. ஆனால் பாஜகவின் கொள்கைகள் ‘இந்துத்துவ’ என்ற பெயரில் வடமாநில கலாச்சாரத்தைத் தமிழகத்தில் திணிக்கின்றனர்.

we-r-hiring

​மாநில அரசுகளின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது. மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிட்டு நீட் தேர்வை கட்டாயமாக திணித்து வருகிறது.

​தமிழகம் செலுத்தி வரும் வரி வருவாயில் ஒன்றிய அரசு மிகக் குறைந்த அளவே மாநிலத்திற்குத் திரும்பக் கொடுக்கிறது. ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில அரசுக்கு பங்கீடு செய்வதில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய பாஜக அரசு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து தனி அரசாங்கத்தை நடத்துகிறது. ஆளுநர் மூலம் மாநில அரசின் செயல்பாட்டை முடக்குகிறது.

தமிழ்நாடு தொடர்ந்து ​தந்தை  பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட சமூக நீதி (Social Justice) மற்றும் மதச்சார்பின்மை (Secularism) கொள்கைகளில் உறுதியாக உள்ளது.

​பாஜகவின் இந்துத்துவ அரசியல் சிறுபான்மையினரை (முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அச்சுறுத்தல் செய்கிறது. வடமாநிலங்களில் இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு தளங்களையும், கிரிஸ்த்துவர்களின் தேவாலையங்களையும் இடிக்க முயற்சி செய்கிறது. கலவரங்களை தூண்டி இந்தியாவில் ரத்தக்கறையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற கலவரக்காரர்களை தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

பாஜக கட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் ​இடஒதுக்கீடு கொள்கையில்  முழுமையான உடன்பாடு இல்லை. பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு (EWS) கொண்டு வந்ததும் தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் எதிராக இருப்பதாக தமிழர்கள் கருதுகின்றனர். அண்டை மாநிலங்களுடன் நீர் பகிர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை.காவிரி டெல்டா பகுதிகளில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தது விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.

​ஈழத்தமிழர் நலன் மற்றும் மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு காட்டும் மெத்தனப் போக்கு கண்டிக்க கூடியது. பாஜக கட்சி தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் தொடர்ந்து எதிராக இருக்கிறது. அதனால் எதிர்க்கிறார்கள்.

தொகுதி மறுவரையறை – ரகசியம் காப்பது ஏன்? – முதல்வர்

MUST READ