spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!

-

- Advertisement -

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் கொடுத்த உதவிய நிலையில், இரண்டு நாட்களுக்குள் மீண்டும் 3 லட்சம் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!

தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா பல நலத்திட்ட உதவிகளின் மூலம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்தந்தது, ஏழ்மையான குழந்தைகளை படிக்க வைப்பது என, திரையில் பணியாற்றி அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி  தேவைப்படும் பலருக்கு இது போல் உதவி செய்து வருகிறார்.

we-r-hiring

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!

இந்நிலையில்  சென்னை.மிக்ஜாம் வெள்ளத்தில் அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர்,  பம்மல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  – குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு  மொத்தமாக இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார்.

பின்னர் தனது அவசர தேவைக்காக வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மற்றும் தன்னால் முடிந்த பணத்தை திரட்டி, பள்ளிக்கரனையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 600 கிலோ அரிசி வாங்கி அளித்துள்ளார். அடுத்ததாக துரைப்பாக்கம் பல்லவன் நகரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நைட்டி,  ஆண்களுக்கு கைலி என வெள்ள நிவாரணம் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!

நரிக்குறவர் சமுதாய மக்கள், மழையால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்கள் என 140 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் மொத்தம் 1,40,000 ரூபாய் உதவித்தொகையுடன் ரூபாய் 1,60,000 மதிப்புள்ள நைட்டி, கைலி உட்பட வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். பாலா இதுவரை  மொத்தம் 5லட்சம் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ