Homeசெய்திகள்கட்டுரைபாஜகவின் 2026 தேர்தல் நாடகம்! தாமோதரன் பிரகாஷ் உடைக்கும் மர்மம்!

பாஜகவின் 2026 தேர்தல் நாடகம்! தாமோதரன் பிரகாஷ் உடைக்கும் மர்மம்!

-

- Advertisement -

டாஸ்மாக் தொடர்பாக நடைபெற்ற சோதனைகளில் அமலாக்கத்துறை இதுவரை பணம் எதையும் கைப்பற்றப்படவில்லை. அவர்களது அரசியல் நாடகத்தை பத்திரிகையாளர்களே தோலுரித்து கட்டி விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் விவகாரத்தில் நடைபெறும் சோதனைகள் மற்றும் இந்த விவகாரத்தில் பாஜக செய்யும் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அமலாக்கத் துறை என்பது சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கக்கூடிய துறையாகும். நல்ல நோக்கத்திற்காக காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதற்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கினார்கள். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கிற ஊழல் பணத்தை மீட்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. முன்னர் பெரா, பெமா, காபிபோசா போன்ற பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவற்றை எல்லாம் ஒன்றிணைத்து பி.எம்.எல்.ஏ என்று கொண்டுவந்துள்ளனர்.

தற்போது 10 ரூபாய் ஜெனரேட் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியதில் ரூ.1000 கோடி வசூலாகி உள்ளதாகவும், அந்த பணம் இங்கே வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இவர்கள் விசாகன் மற்றும் ரத்தீஷ் இடையே நடைபெற்றதாக காட்டும் பணப்பரிமாற்ற என்பது, ஒரு கற்பனையான பணப்பரிமாற்ற விவரங்கள் ஆகும். இந்த பணம் உதயநிதிக்கு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். அதன் மூலமாகவே திமுக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளதாக சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க கற்பனையானதாகும். மோடி ஆட்சி  அமைந்த பிறகு அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் 2 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி, அமைச்சராக இருக்கக்கூடாது என்று போட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பாஜகவுக்குள் எவ்வளவு பேர் உள்ளே வந்தார்கள். அவர்கள் எல்லாம் பாஜகவுக்கு சென்ற உடன் அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. சுவேந்து அதிகாரி, அஜித் பவார், பிஸ்வாஸ் சர்மா என்று பெரிய பட்டியலே உள்ளது. இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக தான் சட்டப்பிரிவு 21 அப்ளை ஆகிறது. பிஎம்எல்ஏ சட்டத்தால் ஜாமின் மறுக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி ஹேமந்த் சோரன், கவிதா, செந்தில் பாலாஜி போன்றவர்கள் வெளியே வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் பதவிகளில் உள்ளனர். அஜித் பவார், துணை முதலமைச்சராக உள்ளார். செந்தில் பாலாஜி சாதாரண அமைச்சராக தான் இருந்தார். அப்போது சட்டப்பிரிவு 21ன் படி வெளியில் வந்தவர்கள் எல்லாம் பதவி வகிக்கக்கூடாது என்றால் இவர்கள் எல்லாம் எப்படி பதவி வகிக்கிறார்கள். அந்த கேள்விதான் வந்தது. இந்த கேள்வி உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட நிலையில், அதனை பொருட்படுத்தவில்லை.

இது போன்ற ஒரு நேரட்டிவ் செட் செய்து, திமுகவை நிலைகுலையச் செய்வதுதான் இவர்களுடைய திட்டமாகும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எடப்பாடி என்று எல்லோர் மீதும் வழக்குகள் உள்ளன. ஆனால் நீங்கள் செந்தில் பாலாஜி மீது இல்லாத ஒரு புகாரை ஆயிரம் கோடிக்கு வழக்குப்பதிவு செய்துகொண்டு அவரை மீண்டும் கைதுசெய்ய முயற்சிக்கிறீர்கள். ஏன் என்றால் செந்தில் பாலாஜி இருந்தால் உங்களால் கொங்கு பெல்ட்டில் வெற்றி பெற முடியாது. நீங்கள் எவ்வளவு பேரை தூக்கி உள்ளே வைத்தாலும், அவர்களால் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியும். செந்தில்பாலாஜியை துக்கி உள்ளே வைத்தால் அதேவேளையை அசோக் வந்து செய்வார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு தனக்கு நெருக்கமானவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப் போகிறார்.

முதலமைச்சரை தூக்கி உள்ளே வைத்தால், அது அரசியல் அட்வாண்டேஜ் கொடுக்காதா? அதனால் ஸ்டாலினோ, உதயநிதியோ சிறைக்குள் இருந்து அதை சந்திப்பார்கள். பாஜகவின் குறி யாருக்கு என்பது திமுகவினருக்கு நன்றாக தெரியும். உதயநிதியை அவர்கள் குறிவைக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கிறபோது உதயநிதி வெளிப்படையாக டாஸ்மாக்கில் இருந்து ஆயிரம் கோடியை எடுத்து இவ்வளவு வெளிப்படையாக விசாகனிடம் கொடுத்து, அதை அவருடைய நோட் பைலில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதற்கும், அது அமலாக்கத்துறை கையில்  சிக்குவதற்கும் ஒன்றுமே இல்லை. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் இதுவரை பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்போது அவர்கள் என்ன அவ்வளவு அப்பாவியா? இவர்கள் பொய்யாக கட்டமைக்கிறார்கள். அதை நாம் நீதிமன்றத்தில் தான் சொல்ல முடியும்.

செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு என்பது அதிமுக காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். அவர் தினகரன் அணியில் இருந்தபோது எடப்பாடியால் போடப்பட்டதாகும். அதை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுக்கிறது என்றால், தங்கமணி, வேலுமணி, எடப்பாடி போன்றவர்களின் மீதான வழக்குகளை ஏன் விசாரிப்பது இல்லை. நீங்கள் தொடர்ந்து, திமுகவை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் தொடக்கிறீர்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், மகன், மருமகள் உள்ளிட்ட எல்லோரையும் குறிவைத்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நேற்று பத்திரிகையாளர்களே கிழிகிழி என்று கிழித்தனர்.

பத்திரிகையாளர்களிடம் குப்பையில் கிடைக்கின்ற ஆவணங்களை போய் எடுங்கள் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொல்ல, பத்திரிகையாளர்கள் எல்லாம் போய் எடுத்துள்ளனர். சவுக்கு போன்றவர்கள் பெரிய போபர்ஸ் ஆவணத்தை பறிமுதல் செய்தது போன்று காட்டுகிறார்கள். அப்போது இவை எல்லாம் நாடகம் தானே. இந்த டிராமாவை பத்திரிகையாளர்களே வெளிப்படுத்துகிறார்கள். அப்போது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்பது மக்களுக்கு தெரியுமல்லவா? அதுபோதும் திமுவுக்கு. பாஜகவை எதிர்த்து திமுவுக்கு ஒரு சின்ன மயிரிலை கிடைத்தாலும் அதை வைத்து அரசியல் செய்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ