spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை45 நிமிட நேர்காணல்! கிழித்து தொங்கவிட்ட PTR! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்!

45 நிமிட நேர்காணல்! கிழித்து தொங்கவிட்ட PTR! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வரப்படுவதன் அஜெண்டா, வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் கூறியுள்ளார்.

we-r-hiring

The Wire ஆங்கில இணையதளத்திற்காக பிரபல பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர் சத்யராஜ் வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது :- எஸ்.ஐ.ஆர் நடைமுறை, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடைபெற்று தேர்தலில் பாஜக இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து 10 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை தொடங்குகிறார்கள். இந்நிலையில், the Wire ஆங்கில இணையதளத்திற்கு பிடிஆர் அளித்துள்ள நேர்காணலில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன என்று விளக்கியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் மனுக்களை 6.5 கோடி மக்களிடம் கொடுக்கப் போவது அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை அரசு ஊழியர்கள் தான். தமிழ்நாட்டில் சுமார் 68ஆயிரம் பிஎல்ஓக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் சராசரியாக 1000 வாக்காளர்களை சந்தித்து விண்ணப்பங்களை விநியோகித்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான செயலில் பதிவேற்ற வேண்டும். இந்த செயலி அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக அமைச்சர் பி.டி.ஆர் சொல்கிறார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிஎல்ஓ-க்களை பயன்படுத்தி தான் தேர்தல் ஆணையம் வேலை வாங்குகிறது. பகுதி நேரமாக இந்த வேலையை செய்கிற பிஎல்ஓக்கள், ஒரு நபர் தலா ஆயிரம் விண்ணப்பங்களை ஒவ்வொரு வீடாக சென்று பூர்த்தி செய்து, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஒரு வீட்டிற்கு மட்டும் அரை மணி நேரம் ஆகும். ஒவ்வொரு வீட்டிற்கும் பிஎல்ஓக்கள் 3 முறை சென்று பார்க்க வேண்டும் என்கிறபோது அவர்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.இதனை புள்ளி விபரங்களுடன் பிடிஆர் எடுத்துரைக்கிறார். கடந்த சில நாட்களில் மட்டும், சில பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் மன அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளனர்.

அரசின் கடைநிலை ஊழியர்களை குறிவைத்து எஸ்ஐஆர் பணிகளை செய்கிறபோது அவர்கள் தற்கொலை செய்து கொள்கிற மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதம் பருவமழைக்காலமாகும். இந்த காலகட்டத்தில் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு செல்வது ஆபத்தானது என்கிறார் அமைச்சர் பிடிஆர். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வருவதால் மக்களை சந்திப்பதும் சிரமமானது என்று களத்தில் உள்ள எதார்த்தமான பிரச்சினைகளை எடுத்துரைக்கிறார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் 90 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அதை எப்படி வழங்கினார்கள் என்று பி.டி.ஆர் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிஎல்ஓக்கள் ஒரு விண்ணப்பத்தை நிரப்ப முடியாமல் மன உளைச்சலில் மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை தொடங்கியபோது பிஎல்ஓக்களுக்கு முறையாக பயிற்சி வழங்கவில்லை என்கிறார். 68 ஆயிரம் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார் என்றே தெரியவில்லை. அரசியல் கட்சி முகவர்கள் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களில் குறைந்தபட்சம் 100 பேர் வீதம் பயிற்சி அளித்தாலும் எவ்வளவு பேர் தேவைபடுவார்கள்? அந்த பயிற்சி அளித்த நபர்கள் யார்? அவர்களுக்கு பயிற்சி வழங்கியது யார்? என்று கேள்வி எழுகிறது. இது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லாமல் நட்டாற்றில் மக்களை இறக்கவிட்டது போன்ற நிலை இருக்கிறது என்று பிடிஆர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் பணிகளை முடிக்க இன்னும்  2 வாரம் கூட கிடையாது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு மனுக்களை எப்படி பூர்த்தி செய்து செயலியில் பதிவேற்ற முடியும்? என்று பிடிஆர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதேபோல் பீகாரில் எஸ்ஐஆர் நடைபெற்ற போதும் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தீர்ப்பை தான் வழங்கினார்கள். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 11 ஆவணங்களும், அதனுடன் ஆதாரையும் ஒரு ஆவணமாக சேர்க்கலாம் என்று சொன்னார்கள்.

ஆனால் எஸ்.ஐ.ஆரை ஏன் அவசர அவசரமாக நடத்துகிறார்கள். அதை துல்லியமாக நடத்தி முடியுமா? என்று கேள்வி எழுப்பவில்லை.  அமைச்சர் பிடிஆர், மத்திய அரசால் மக்கள் தொகை கணக்கெடுப்பையே 15 ஆண்டுகளாக நடத்த முடியாதபோது, எஸ்ஐஆர் நடவடிக்கையை மட்டும் எப்படி வெற்றி கரமாக செய்து முடிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு புறம் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் அதை விட சிக்கலான எஸ்ஐஆர் பணிகளை வேகவேகமாக நடத்துகிறார்கள். எஸ்.ஐ.ஆர் என்பது குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு குறுக்கு வழி என்றும் பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடத்தி 65 லட்சம் பேரை நீக்கினார்கள். அப்படி நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள், யாதவர்கள் மற்றும் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் ஆவர். அதேபோல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடத்தப்படுவதன் அஜெண்டா என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த அஜெண்டா தெளிவாக புரிய வேண்டும் என்றால்? தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் 11 ஆவணங்கள் மட்டும் இன்றி புதிதாக 12 மற்றும் 13வது ஆவணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. முதலாவது சில கட்டுப்பாடுகளோடு ஆதார் அட்டையை சேர்த்துள்ளனர். மற்றொன்று பீகாரிகளை எப்படியாவது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே கொண்டு வந்துள்ளனர். இதன் வாயிலாக தமிழ்நாட்டில் வாக்காளர்களை நீக்குவதை விட சேர்க்கையை அதிகரிக்க போகிறார்கள்.

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பீகாரிகள் 6.5 லட்சம் பேரை திணிப்பதற்கான வேலை நடைபெறுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகளில் 12.70 லட்சம் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். முறைசாரா தொழில்களில் கிட்டத்தட்ட 49 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். அப்போது 70 லட்சம் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேல செய்கிற சூழலில் கணிசமான பீகாரிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற பல விஷயங்கள் குறித்து பிடிஆர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த வாதங்களை வைத்தபோதும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ