spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா?

-

- Advertisement -
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்டமசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம்தானா என கேள்வி எழவே செய்கிறது.

 

100% வாக்களிக்க வலியுறுத்தி

we-r-hiring

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமாகும். நாட்டில் கடந்த 1951ஆம் ஆண்டு தொடங்கி  1967ஆம் ஆண் வரை மக்களவைக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இதேபோல், 4வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1983 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.

பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!

இந்த நிலையில் தான் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, அதனை செயல் படுத்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு தேசியச் சட்ட ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக்கேட்கத் தொடங்கியது.  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டதற்காகச் சில மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக்காலத்தைக் குறைக்கவும், சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

mallikarjun kharge press meet

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானதாகும். மேலும், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் தான்  ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் ஆய்வுக்க்குழுவை பாஜக அமைத்தது. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கையில் குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கவும் குழு பரிந்துரைத்தது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் பரிந்துரை வழங்கியது.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அரசு நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜகவின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம்  திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்!.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் என பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டை ஒரே மொழி, ஒரே மதம், பொதுசிவில் சட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என ஒற்றைத்தன்மை படுத்த வேண்டும் என்பது பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகவே இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற திட்டமிட்ட பாஜகவுக்கு, தேர்தல் முடிவுகள் மரண அடியாக விழுந்தது. அதேபோல், தற்போது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கவும், ஒற்றை ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் பாஜக இந்த சட்டத்தை கொண்டுவர துடிக்கிறது. ஆனால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவர விடாமல் தடுப்பதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் பாஜக பெரும்பான்மையுடன் உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டத் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவையாகும். இதனால் இந்த சட்டத்தை நிறைவேற்றுவது அவ்வளவு எளிது இல்லை என்பதே எதார்த்த உண்மையாகும்.

 

MUST READ