spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!

நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!

-

- Advertisement -

அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்பதை அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். அவரது கருத்து அதிமுக தொண்டர்களின் கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். தொடக்க நிகழ்வில் கூட்டணி கட்சியினரான பாஜவினரும் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு இன்னும் தேர்தல் களத்திற்கு தயாராகவில்லை. ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சார களத்தில் இறங்கிவிட்டார்கள். திமுக, ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் ஒரு பயண திட்டத்தை வகுத்து, எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இவை எல்லாம் மக்களை தயார்ப்படுத்தும் ஒரு நிகழ்வுதான்.

ஏன் முன்கூட்டியே இத்தனை முஸ்தீபு என்றால் 2026 தேர்தல் எல்லோருக்கும் நெருக்கடியானதாகும். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் நெருக்கடி உள்ளது. எப்படி அவர்கள் தமிழகத்தை கையாள போகிறார்கள். திமுகவை பொருத்தவரை கலைஞருக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது. மீண்டும் இந்த ஆட்சியை தொடர வைத்தால், திமுக வரலாற்றில் கலைஞருக்கு கிடைக்காத பெருமை மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில், தற்போது வராவிட்டால் எப்போது வருவது என்று நினைக்கிறார்கள்.

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதற்கான கூட்டணி பலம் அதிமுகவிடம் இல்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி, அதில் பாஜக பங்கேற்கும் என்று சொல்கிறார். அப்படி சொல்கிறபோது மக்கள் வாக்களிப்பார்களா? எதிர்ப்பு வலையில் நாமே போய் சிக்கிக் கொண்டோமா? என்கின்ற பயம் அதிமுகவினரிடம் உள்ளது. கூட்டணி ஆட்சி என்றும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் சுலபமாக இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமியும் நினைக்கலாம். அது தான் இரண்டாம் கட்ட தலைவர்களான ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களை வைத்து, அதிமுக குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் விமர்சித்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று சொன்னார். மேலும், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் சொன்னார். அப்போது கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா சொல்கிறார். அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தாலும், அவர்களால் காலூன்ற முடியாது என்று சொல்கிறார். அன்வர் ராஜாவின் கருத்து என்பது அதிமுக தொண்டனின் கருத்தாக பார்க்கிறேன்.

தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு - எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?

எடப்பாடி பழனிசாமி கோவையில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கலாம் என்பதற்காக அவர் இதனை செய்திருக்கலாம். எஸ்.பி. வேலுமணி, எடப்பாடியின் இடத்திற்கு ஆசைப்படுகிறார் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாஜக செங்கோட்டையனை வைத்து தற்போதும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கூட செங்கோட்டையன் குருமூர்த்தியை சென்று சந்தித்துள்ளார். அவர் எதற்காக சந்தித்து பேசினார் என்று யாருக்கும் தெரியாது.

அழுத்தம் காரணமாக தான் அதிமுக, பாஜக கூட்டணிக்கு சென்றது. அமித்ஷா உள்ளிட்ட பாஜவினர் கூட்டணி ஆட்சிதான் என்று தொடர்ந்து சொல்லும் பட்சத்தில் எடப்பாடி கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியேறலாம். ஒருவேளை இருவரும் தனித்தனித்தயாக போட்டியிட்டு, தேவைப்பாட்டல் கூட்டணி அரசு அமைக்கலாம் என்று சொல்லலாம். அப்படி அதிமுக கூட்டணியில் இருந்து சென்றால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம். எல்லோரும் கூடுதல் தொகுதிகள் கேட்டால் திமுகவுக்கு நெருக்கடிதான்.

விஜய் அதிமுக கூட்டணிக்கு வர மாட்டேன் என்று திட்டவட்டமாக சொன்ன பிறகுதான், அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்றது.  விஜயுடன் அதிமுக பேசியது உண்மை. அவர் வர மறுத்தது உண்மை. அதன் பிறகு தான் அதிமுக இந்த முடிவை எடுத்தது. தன்னுடைய பலம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை பார்க்கிறார். அவருடன் இருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர்கள், நமக்கான வாக்கு வங்கியை நோக்கி பயணிக்கலாம் என்றும், ஒருவேளை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு அவர்கள் நம் பக்கம் வரலாம்.

அல்லது அதிமுக வெற்றி பெற்றால் திமுகவில் அடுத்த தலைமை யார்? என்கிற பிரச்சினை வரும். உதயநிதியின் தலைமையை சீனியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அங்கிருந்து வருபவர்களை நாம் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது விஜய்க்கு 2026 தேர்தல் இலக்கு கிடையாது. திமுக நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டும் முக்கியமல்ல கூட்டணி கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளன.

த.வெ.க முதல் மாநாடு.... தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!

தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா போன்றவர்கள் ஆவர். தற்போது இவர்கள் பாஜக உடன் சேர்ந்து அதிமுக கூட்டணிக்குள் வருகிறபோது, அது எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலம்தான். இருப்பதில் எது சாதகம் என்று எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார். மும்மொழி கொள்கை என்று மத்திய அரசு ரூ.2,500 கோடி தர வேண்டும். இதுகுறித்து மக்களிடம் பேசினால் அவர்களுக்கு புரியாது.

வாக்கிற்கு பணம், வாக்குகளுக்காக நலத் திட்டங்கள் என்கிற பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் சாலைத்திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போட்டார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இந்நேரம் திட்டம் முடிந்திருக்கும். அதை செய்திருந்தால் மிகப்பெரிய சாதனையாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ