spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரே நாளில் சுக்குநூறான அமித்ஷா இமேஜ்! மேடையில் கதறிய பின்னணி! வல்லம் பஷீர் நேர்காணல்!

ஒரே நாளில் சுக்குநூறான அமித்ஷா இமேஜ்! மேடையில் கதறிய பின்னணி! வல்லம் பஷீர் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று அமித்ஷா தங்களின் தேர்தல் வியூகத்தை பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என்று திராவிட வெற்றிக் கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திராவிட வெற்றிக்கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழகம் வருகை தந்துள்ள அமித்ஷா, எப்படியாவது திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், ஏப்ரல் மாதத்தில் என்டிஏ ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார். முந்தைய பயணங்களில் அமித்ஷாவுக்கு இல்லாத பதற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதை தான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது. அமித்ஷாவினுடைய பேச்சு அதிமுகவுக்குள் ஒரு சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரையில் பேசியபோது அதிமுகவில் இருந்து ஒரு முதலமைச்சர் என்று சொன்னார். அது அதிமுகவுக்குள் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது கேள்விக்குறியதாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி அதிமுக களத்தில் இறங்கி தயாராக உள்ளது. அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா, தன்னுடைய பேச்சில் ஓரிடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி குறித்து பேசவில்லை. அதிமுக ஆட்சிக்கூட என்று சொல்லாமல் என்டிஏ கூட்டணி என்று அமித்ஷா சொல்கிறார். இதுவே தமிழ்நாட்டின் தன்மைக்கு எதிரானதாகும். இது அதிமுகவை இன்னும் பலகீனமடையச் செய்கிறது.

அதிமுக எந்த அளவுக்கு பலவீனமடைகிறதோ, அந்த அளவுக்கு தேர்தல் களத்தில் பாஜக தோல்வியை சந்திக்கப் போகிறது என்பதை உணராமல் அமித்ஷா பேசுகிறார். அதிமுக – பாஜக கூட்டணி, பலமான கூட்டணியாக அமைவது போன்று ஒரு மாயத் தோற்றம் உருவான போதும், அதை வைத்து நீண்ட நாட்கள் தேர்தல் களத்தில் நிற்க முடியவில்லை. திமுகவை எதிர்க்கும் வல்லமையை என்டிஏ கூட்டணி பெறவில்லை என்பது அதிமுகவுக்கு இருக்கும் மனச்சோர்வாகும். இதை சரிசெய்ய நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்கிற பெயரை பெற வேண்டும். அதிமுக என்கிற பெயரையே சொல்ல அமித்ஷா மறுக்கிறபோது, அவருக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டாமா?

அப்படி செய்யாமல், அமித்ஷா நிகழ்ச்சியை புறக்கணிப்பதன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்பது, எதன் பொருட்டு. அந்த புறக்கணிப்பையாவது நேரடியாக சொல்ல துணிச்சலுடன் இருக்கிறீர்களா? அதை சொல்கிற நிலைமை கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவ்வளவு பயமும், அச்ச உணர்வும் எடப்பாடி பழனிசாமியை துரத்துகிறது. ஒரே இரவில் அவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதற்கு காரணம் தன்னுடைய மகனும், சம்பந்தியும் யாருடைய பிடியில் இருக்கிறார்கள் என்பதுதான். அதற்காக தான் எடப்பாடி பழனிசாமி கட்சியை அடமானம் வைக்கும் முடிவுக்கு வந்தார்.

eps

திமுக ஊழல் அரசு என்று சொல்கிறார் அமித்ஷா. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்று அனைத்து துறைகளும் அவரிடம் தானே உள்ளது. தமிழ்நாட்டில் சோதனை நடத்தி ஊழல் செய்ததற்கான ஆவணங்களை வெளியிட வேண்டியது தானே. வாரிசு அரசியல் குறித்து பாஜக பேச முடியுமா? நயினார் நாகேந்திரனின் மகன் தற்போது எங்கே இருக்கிறார். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா என்ன பெரிய கிரிக்கெட் வீரரா? அவர் கிரிக்கெட் உலகின் பெரிய பொறுப்பில் உள்ளார். தமிழ்நாட்டின் பொறுப்பாளராக உள்ளவரின் குடும்ப பின்னணி என்ன? இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பேசுகிறார்.

இந்துக்களின் சொத்துக்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்ததை மீட்டு எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். அவரா இந்துக்களின் எதிரி என்பது இந்துக்களுக்கு புரிகிறது. அவர் ஹெச்.ராஜா எழுதி கொடுப்பதை வைத்து அப்படியே பேசுகிறார். தன்னுடைய துறைகளை வைத்து, அவர் விசாரிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தை எவ்வளவு தூரம் அமித்ஷா போன்றவர்கள் பேசுகிறார்களோ, அவ்வளவு தூரம் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும்.

ஏப்ரல் மாதத்தில் என்டிஏ ஆட்சி அமையும் என்றும், எப்படியாவது திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமித்ஷா சொன்னதை அவருடைய ஒப்புதல் வாக்கு மூலமாக தான் பார்க்கிறேன். பிரதமர் மோடியின் சுற்றுபயண விவரங்களை பெற்றுக்கொண்டு தான், தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவிக்கிறது என்று நாம் ஏற்கனவே குற்றச்சாட்டி உள்ளோம். அமித்ஷா எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதன் மூலம் தேர்தல் ஆணையத்தை தாங்கள் வசப்படுத்தியதை சொல்கிறார்.

மற்றொன்று தேர்தல் தேதி முன்கூட்டி வரப்போகிறது என்பதை அமித்ஷா அறிவிக்கிறார். தேர்தல் ஆணையரிடம் சொல்லி வைத்துவிட்டு வந்து அமித்ஷா பேசுகிறார். இது தமிழக மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அவருக்கு தெரியவில்லை. முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக தான் அவர்கள் அவசர கதியில் எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளனர். பாஜகவின் தேர்தல் வியூகத்தை அமித்ஷா அறிவித்துவிட்டார். அதற்கு எதிர் வியூகம் அமைத்து, பாஜகவின் வியூகத்தை முனை மழுங்க செய்யும் வல்லமை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ