spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன?...

விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான குற்றப்பத்திரிகை வெளியாகும் போது, தவெக தரப்பில் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் உடைபடும்  என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணை விவரங்கள் வெளியானதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஜன.15க்குள் சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாக வேண்டும். இந்த வழக்கின் விசாரணை திருச்சி சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. கரூர் கூட்டநெரிசல் வழக்கில் கரூர் டவுன் போலீசார் போட்ட ஒரே எப்ஐஆர் தான் உள்ளது. அதில் தவெக நிர்வாகிகள் 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மற்றவர்களை விட்டாலும், கருர் மாவட்ட செயலாளர் மதியழகனை விட முடியாது. அவர் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். ஏதோ ஒரு நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் உள்ளதாக நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அது நாளை நீதிமன்றத்தில் நிரூபணம் ஆக வேண்டிய விஷயம். தவெக தரப்பில் அரசியல் சதி என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதை வழிமொழிந்து, பின்னர் சட்டமன்றம் வரை எடுத்துச்சென்ற அதிமுகவிடமோ, சதி கோட்பாட்டை எதிர்க்கும் திமுகவினரிடமோ இதுவரை சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொதுவாக கூட்டநெரிசல் மரணங்களில் சதி கோட்பாடை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். சதியை நிரூபிக்க குற்றமுறும் மனம் தேவை. கரூரில் கூட்டம் நடத்த செப்டம்பர் 25ஆம் தேதி தான் அனுமதி கேட்டார்கள்.  செப்டம்பர் 27ல் கூட்டநெரிசல் நடைபெற்றது. இடையில் ஒரு நாளில் மிகப்பெரிய சதியை அரங்கேற்ற முடியாது. சதிக் கோட்பாடை தவெகவினர் உள்ளே கொண்டுவருவார்களேயானால் வழக்கு அடிபட்டு போய்விடும். சதி என்பது பல கண்ணிகளால் ஆன சங்கிலியாகும். ஒரு கண்ணி அறுந்தாலும் சதி கோட்பாடு காலியாகிவிடும். அதேமாதிரி சதியில் 40 பேரை கொண்டு வந்தாலும் அது பிரச்சினை ஆகிவிடும்.

எனவே குற்றம்சாட்டப் பட்டவர்களின் எண்ணிக்கை 4-5 பேர் தான் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கவனக்குறைவு என்கிற குற்றச்சாட்டு தான் நிற்கும் என்று நினைக்கிறேன். தவெக தரப்பில் உடற்கூராய்வு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால்,  1990ல் இருந்த உடற்கூராய்வு முறைகளுக்கும் தற்போதும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. எனவே அதில் சதி செய்வது என்பது நம்பும்படியாக இல்லை.

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

தவெக நிர்வாகிகளிடம் நடத்திய விசாரணை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் செல்போன் ரெக்கார்டு தொடர்பான விவரங்கள் உள்ளன. போலீசாருக்கு செல்போன் ரெக்கார்டு தொடர்பான பாதகமான அம்சங்கள் இருந்த நிலையில், அவர்கள் வாக்கி டாக்கியில் பேசியதாக கூறி சமாளித்துவிட்டனர். அதை சிபிஐயால் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் தவெக தரப்பில் செல்போன் அழைப்பு வந்தது என்றால், அந்த விவரங்கள் அவர்களின் செல்போனில் இருக்க வேண்டும். கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மேலே, ஒரு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பு உள்ளது. அக்குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.

குற்றச்சாட்டில் ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை அடிபட்டு போனால் மிகவும் சிரமமாகிவிடும். அப்போது சதி என்றால் நிரூபிப்பது சிரமம். சம்பவத்திற்கு கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணம் என்றால் அது நிரூபிக்க எளிது. இதில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மீது குற்றம் சாட்ட முடியாது. உள்ளுர் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யலாம். அது அரசியல் ரீதியாக எடுபடாது. அதேநேரம் தவெக தரப்பில் ஒருவரை குற்றவாளியாக கொண்டுவந்தால் அரசியல் ரீதியாக பாதகத்தை ஏற்படுத்தும்.

முன்பு பாஜக, தவெகவுக்கு கருணை கண் காட்டுமோ என்கிற சந்தேகம் இருந்தது. தற்போது கூட்டணி இல்லை என்றாகிவிட்டதால் அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள். இது தவெகவுக்கு அரசியல் ரீதியாக அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காமல் போய்விடும் என்கிற ஐயம் ஏற்படுகிறது. காரணம் திமுக மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டை அக்டோபரில் நிறைய நம்பினார்கள். ஆனால் குற்றப்பத்திரிகை வெளியான பிறகு, திமுக அரசியலுக்காக வேண்டும் என்றே செய்தது. பாட்டிலுக்கு பத்து ரூபாய்… பாடிய பிறகுதான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தவெக வைக்கும் குற்றச்சாட்டில் இருந்து திமுக விடுபட்டு விடும் என்று தான் நினைக்கிறேன்.

குற்றப் பத்திரிகை மிகவும் நேர்மையானதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மலுப்பலாக இருக்காது என்பது என்னுடைய பார்வை. அதனால் குற்றப் பத்திரிகை வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். இந்த வழக்கில் விஜயை, உள்ளே கொண்டு வருகிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவரை சாட்சியாக கொண்டு வந்தாலே போதும். அவரை சாட்சி பட்டியலில் கொண்டு வந்தாலும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் குற்றவாளிகள் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்றால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்.

திமுக - அண்ணா அறிவாலயம்

தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்ற விசாரணை விவரங்கள் கசிந்துள்ளது, அரசியல் ரீதியாக திமுகவுக்கு லாபமாகும். அவர்கள் செப்டம்பரில் இருந்து நவம்பர் மாதம் வரை இதன் பின் விளைவுகளை சந்தித்தனர். சட்டமன்றத்தில் இதை பெரிதாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. தற்செயலாக நடந்த விபத்து என்று இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி தான் இதை சதி என்று சொன்னார். தவெக தங்களோடு கூட்டணிக்கு வரும் என்கிற அரசியல் எதிர்பார்ப்புகளோடு எடப்பாடி பழனிசாமி பொதுவெளியில் குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். அதை சட்டமன்றத்திற்கு அவர் எடுத்துச் சென்றால் தான், முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் விஜய் தாமதமாக வந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டது. இவ்வளவு தெளிவு படுத்தாமல் இருந்திருந்தால் அரசியல் ரீதியாக திமுகவுக்கு நஷ்டமாக முடிந்திருக்கும். அரசியல் ரீதியாக லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை என்கிற நிலைக்கு திமுக டிசம்பர் மாதமே போய்விட்டார்கள்.

கருர் வழக்கில் ஒரே எப்.ஐ.ஆர் உள்ளதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் போது தவெகவுக்கு பாதகமாக வரலாம். இது எப்படியான முடிவை நோக்கி போகும் என்றால்? ஜனவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு வரும். பிப்ரவரி, மார்ச்சில் இதை தள்ளுபடி செய்யக் கோரி விஜய் தரப்பு தாக்கல் செய்யும் மனுவின் முடிவு தெரியும். மார்ச்சில் சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணை தொடங்குகிறது என்றால்? தேர்தல் நடக்கும் காலத்தில் விசாரணை தினசரி வந்துகொண்டு இருக்கும். இது மக்களின் மனநிலையை வேறாக மாற்றும்.

MUST READ