spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக நிர்வாகி ஆதவ் – சபரீசன் தொடர்பாக சவுக்கு சங்கர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சவுக்கு சங்கர், கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐக்கு ஒரு மிக முக்கியமான தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனாவும், சபரீசனும் பேசிக் கொண்டார்கள் என்பதுதான் அந்த தகவல். அத்துடன் கரூரில் போலீஸ் தடுத்தும் வாகனத்தை கூட்டத்திற்குள் எடுத்துச்சென்றதும், கரூர் பிரச்சார கூட்டத்தை முன்கூட்டியே நடத்தியதற்கு காரணமும் ஆதவ் அர்ஜுனா என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  சவுக்கு சங்கருக்கு இன்னும் ஒரு விஷயம் தெரியாமல் போய்விட்டது. அவர் ஏன் ஜனநாயகன் திரைப்படத்தை சன் டிவிக்கு விற்பனை செய்தார். அதுவும் சபரீசன் லிங்க் காரணமாக இருக்குமா? ஆதவ் அர்ஜுனா நிறைய தவறுகள் செய்கிறார். ஆனால் அதில் மாட்டுவதே கிடையாது. ஆதவை, அவருடைய அம்மா கூட ஆபரேட் செய்ய முடியாது. அவர் யாருடைய பேச்சையும் கேட்கும் நபர் அல்ல.

கரூர் கூட்ட நெரிசல் என்பது திமுகவின் திட்டமிட்ட சதி. அதை செயல்படுத்தியவர் ஆதவ் அர்ஜுனா என்று குற்றம்சாட்கிறார்கள். சரி விஜய் லைட் ஆஃப் செய்து, ஆன் செய்ய சொன்னது யாருடைய சதி? டிவிக்களில் இன்னும் சிறிது நேரத்தில் விஜய் பேச போகிறார் என்று, 4 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டார்கள். அது யாருடைய சதி? விஜய் 12 மணிக்கு கரூரில் பேசுவார் என்று புஸ்ஸி ஆனந்த் போட்டார். அப்போது அவரும், சபரீசனும் சேர்ந்து செய்த சதியா?  நாமக்கல்லில் இருந்து கரூருக்கு வரும்போது 2ஆயிரம் மோட்டார் சைக்கிள், 40 கார்களுடன் வந்தது யாருடைய சதி? 20 மக்கள் கூட்டம் நிற்கும் இடத்தில், மேலும் 10 ஆயிரம் பேரை கொண்டுவந்து நிறைத்தது யாருடைய சதி? வலதுபுறம் செல்ல வேண்டிய வண்டி, இடது புறம் ராங் ரூட்டில் வந்தது யாருடைய சதி? சவுக்கு சங்கர் சொன்னால், அது வேத வாக்கா? ஆதவ் ஒரு முட்டாள். அவர் இருக்கும் இடத்தை எல்லாம் அழித்துவிட்டு தான் வருவார் என்று ஆதவ் உடைய மைத்துனர் சார்லஸ் சொல்கிறார். தவெக மேடையில் விஜயை வைத்துக்கொண்டே, கடந்த தேர்தலில் விஜய் திமுகவுக்கு வாக்களித்தார் என்று ஆதவ் அர்ஜுனா சொன்னார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதை நக்கீரனில் பதிவு செய்தோம்.

'சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு'- 2 பேர் கைது

ஆதவின் பேச்சில் தவெக-வுக்கு நன்மையை விட, தீமைகள் தான் அதிகம் என்று சார்லஸ் சொல்கிறார். ஆதவின் குணம் தவெகவில் இருப்பவர்களுக்கே தெரியும். ஆனால் அவர் கட்சிக்கு செலவு செய்கிறார். அதற்காக அவரை கட்சியில் வைத்திருக்கிறார்கள். சவுக்கு சங்கர் சொல்வது போல, சிபிஐ அப்படி ஒரு விவகாரத்தை விசாரிக்கவே இல்லை. அவர்கள் கூட்டநெரிசல் சம்பவத்தின் கான்சீக்குவன்ஸ்களை எடுக்கிறார்கள், 314 சாட்சிகளிடம் விசாரிக்கிறார்கள். விஜய் வாகனத்தில் இருந்த டிரோன் கேமராக்களை இயக்கிய நபர் ஆதவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் தொடர்ச்சியாக இல்லை. சிபிஐ தேவைப்பட்டால் விஜய் தான் குற்றவாளி என்று வருவார்கள். விஜயை விசாரணைக்கு உள்ளாக்குவார்கள். புஸ்ஸி, நிர்மல்குமார், மதியழகன் போனறவர்களை கைது செய்வார்கள். விஜயை கைது செய்து திகார் சிறையில் கூட அடைப்பார்கள். எல்லாம் பேரம் படிவதை பொறுத்து உள்ளது. விஜய், பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டால் குற்றமற்றவர் என்று சான்றிதழ் கொடுக்கலாம். விஜய், துணை முதலமைச்சர் ஆக கூட வரலாம்.

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

ஆதவ் அர்ஜுனா மீது கரூர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று கேட்கிறார்கள். விஜய் வருவார் என்பதால் தான் அவ்வளவு கூட்டம் ஏற்பட்டது. அப்போது ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? இந்த சம்பவம் மட்டும் அல்ல ட்வீட் போட்ட விவகாரத்திலும் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்யவில்லை. அது காவல்துறை செய்த தவறாகும். விஜய் கைது செய்யப்படாதது மிகப்பெரிய தவறு. அதற்கு காரணம் ராகுல்காந்தி. ராகுல்காந்தியும், விஜயும் ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, கே.சி.வேணு கோபால் ஆகியோர் சேர்ந்து போடுகிற திட்டம். அப்போது இதே சவுக்கு சங்கர் விசிகவும், காங்கிரசும் திமுக கூட்டணியில்  இருந்து வெளியேறுவதாக கூறினார். அப்போது ஆதவ் அர்ஜுனா சொல்லி அந்த செய்தியை பரப்பினார். தற்போது சவுக்கு சங்கரின் மனைத்துரான சசிகாந்த் செந்தில் சொல்லி இந்த தகவல்களை பரப்புகிறார். தற்போது ஆதவ், சபரீசன் சந்திப்பு இடத்தில் சவுக்கு சங்கர் இருக்கிறார். தற்போது ஆதவை அனைத்து தரப்பில் இருந்து தாக்குகிறார்கள். அவர் ஒரு மூலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார். எதிர்ப்பை சமாளிக்க பல வகைகளிலும் முயற்சித்து வருகிறார்.

தவெகவில் விஜய்க்கு அடுத்த இடத்திற்கு யார் வருவது என்கிற அதிகார போட்டி நடைபெறுவதாகவும், அதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக சொல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். அவரை  கட்சியில் இருந்து தூக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் விஜயின் நம்பிக்கைக்குரிய நபர் ஆவார். அவர் இவற்றை குறித்து எல்லாம் கவலைப்படுவது கிடையாது. தவெகவில் தற்போது எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்வு செய்கிற பணி நடைபெற்று வருகிறது. ஒரு தொகுதிக்கு 2 கோடி வரை கேட்கிறார்கள். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் வீதம் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிறார். அதேபோல் மாவட்ட செயலாளர் நியமனத்திற்கும் பணம் பெறுகிறார். விஜய் கட்சியின் சிறப்பு அம்சம், எல்லோரும் விஜய்க்காக தான் கட்சியில் உள்ளார். கட்சியின் நிர்வாகத்தை புஸ்ஸி ஆனந்த் கையாண்டு வருகிறார். எனவே சவுக்கு சங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு சாத்தியம் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ