spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபராசக்தி வென்றதா? டிரெண்ட் ஆன வீடியோ! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

பராசக்தி வென்றதா? டிரெண்ட் ஆன வீடியோ! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

-

- Advertisement -

பராசக்தி திரைப்படம், இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான ஒரு திறவு கோலாக அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பராசக்தி படம் வெளியாகி உள்ள நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள மாணவர் போராட்ட வரலாறு மற்றும் படத்தில் பேசப்பட்டிருக்கும் இந்தி திணிப்பு அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பராசக்தி என்கிற படம் இந்த பாசிச ஆட்சியில் வெளியாகி இருக்குமா? என்பதே கேள்விக்குறி தான். வரலாற்று ரீதியாக இந்து, இந்தி, இந்தியா என்கிற அடிப்படையில் தான் ஆர்எஸ்எஸ் அல்லது சனாதன தர்மம் இந்தியாவை ஒரு அகண்ட பாரதமாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் மொழித்திணிப்பை எதிர்த்த ஒரு வரலாற்று ரீதியான படம், சென்சாரை தாண்டி வந்துள்ளதே பெரிய சவால்தான். ஒருவேளை இந்த படத்தில் வருகிற வில்லன்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் மோடி அரசு விட்டு விட்டதாக கருதலாம். மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாலிவுட் உள்ளிட்ட அனைத்து திரையுலகங்களும் இந்துத்துவ மயமாக மாறி வருகிறது. இந்த சூழலில் பராசக்தி படம் வெளிவந்திருப்பதே பெரிய விஷயமாகும்.

பராசக்தி படத்திற்கு ஜென்ஸீ தலைமுறையினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 3 மக்களவை தேர்தல்களாக இந்துத்துவா எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு அலை என்பது தமிழ்நாட்டில் உள்ளது. அந்த பின்னணியில் ஜென்ஸீ தலைமுறையினரோ, அல்லது ஜனநாயகனை எதிர்பார்த்து ஏமாந்து பராசக்தி பார்த்த விஜய் ரசிகர்களோ அவர்களிடமும் மோடி எதிர்ப்பு அலை என்பது உள்ளது. அதை மேற்கொண்டு அரசியல் படுத்தாமல் காயடிக்கிற வேலையை விஜய் செய்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த படம் அவர்களுக்கு நேர்மறையில் விழிப்புணர்வு ஊட்டுகிறது. இந்தி திணிப்பு போராட்டத்தை அறிந்தவர்களுக்கு இந்த படம் ஒரு ஏமாற்றம் அளித்திருக்கும். காரணம் இந்த படம் வரலாற்றை அப்படியே சொல்லவில்லை. இந்த படத்தில் பக்தவத்சலத்தை ஒன்றும் அறியாத அப்பாவி போன்று காட்டியுள்ளனர். ஜெயம் ரவி, தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்ப்பதாக காட்டியுள்ளனர்.

மோடியின் ஆட்சியில் சென்சார் சூழலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நேருக்கு நேர் நீங்கள் காண்பிக்க முடியாது. அண்ணா பேசிய தீ பரவட்டும் நூல் குறித்து பொதுவெளியில் பேச முடியாத இந்துத்துவ சூழல் நிலவுகிறது. இப்படியான சூழலில் அதை ஒரு சினிமாவாக கொடுத்திருக்கிறார்கள். இந்த சினிமா அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இளைஞர்களை பொருத்தவரை, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடந்துள்ளது. நிறைய பேர் இறந்துள்ளனர் என்று அவர்களின் அறிவுலகத்தை திறந்துவிடும். இந்த படத்திற்கு நிறைய கட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய இடங்களில் மியூட் போடப்பட்டுள்ளது. அண்ணாவின் பேச்சு மியூட் போடப்பட்டுள்ளது. ஒரு இயக்குநராக இருந்துகொண்டு ஒரு கடினமான சூழலில் இந்த படத்தை ஒரு வடிவத்தில் கொடுப்பது சிரமம். எனவே வரலாற்றை அப்படியே பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அந்த வரலாற்றை தேடி படிப்பதற்கு அந்த படம் ஒரு திறவு கோலாக இருக்கும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

பராசக்தி படத்தில் ஹீரோ, வில்லன், காதல் என்கிற விஷயங்கள் உள்ளன. படத்தை ஜனரஞ்சகமான முறையில் சொல்ல முயற்சித்துள்ளனர். அதில் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியை வைத்துக்கொண்டு வைத்துள்ளனர். இந்த படத்தில் தொட்டதற்கு எல்லாம் சித்தரிக்கப்பட்டவை. முழுக்க முழுக்க கற்பனை என்று சொல்கிறார்கள். இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால், இது உண்மை வரலாற்று பின்னணியில் நடந்த ஒரு கற்பனை கதை என்றாவது சொல்லி இருப்பார்கள். அல்லது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று போட்டிருப்பார்கள். ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே இது முழுக்க முழுக்க கற்பனை என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அப்போது உண்மையில் அப்படி நடக்கவில்லை என்பதை தான் மோடி அரசின் சென்சார் போர்டு விரும்புகிறது. அதையும் தாண்டி வெளியில் இவ்வளவு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இந்தி திணிப்பு குறித்து பேசி இருக்கும்போது, இளைஞர்கள் அதை தேடி படிப்பதற்கு இந்த படம் நிச்சயம் உதவும்.

இந்தி திணிப்பு என்பது கடந்த கால விஷயம் மட்டுமல்ல. தற்போதும் நடக்கிறது. மத்திய அரசு கல்விநிதி ரூ.2200 கோடியை தர ஏன் மறுக்கிறது. தர்மேந்திர பிரதான் வந்து ஏன் பேசுகிறார்? இந்தியை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்து தான் கல்வி நிதியை தர மறுக்கிறார்கள். அப்போது இந்தி திணிப்பு என்பது ஒரு வரலாற்று சம்பவம் அல்ல. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் இந்து, இந்தி, இந்தியா என்கிற அடிப்படையில் ஆர்எஸ்எஸ் இந்தியா ஆள நினைப்பது அரங்கேறி கொண்டிருக்கிறது.  இஸ்லாமியர்கள் வாழ முடியாத இரண்டாம் தர குடிமக்களாக இருக்க வேண்டும். அசைவ உணவுகளே சாப்பிட முடியாத சூழல் ஏற்படலாம். இதை எதிர்த்து நாம் ஒவ்வொரு முனையிலும் போராடி கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு இந்த படம் சின்ன உதவி செய்திருக்கிறது. 2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையே நம்மால் படமாக எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், பராசக்தி திரைப்படம் செய்து கொண்டது சமரசமா? அல்லது அடக்குமுறையை எதிர்கொண்டு வெளிவந்துள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

'பராசக்தி' படத்தில் அவரும் பாடி இருக்கிறாரா? .... வெளியான புதிய தகவல்!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்களும் பங்கேற்றனர். இதை ஆவணப்படுத்துவது, பதிவு செய்வது என்பது சரியானது.  பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, பீகார் தொழிலாளர்களை திமுக அரசு தாக்குதல் நடத்துவதாக சொன்னார். நாம் பீகார் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை தான் வழங்குகிறோமே தவிர, யாரும் தாக்கப்படவில்லை. எனவே இந்தி எதிர்ப்பு வேறு, இந்தி தொழிலாளர்களை வாழ வைப்பது வேறு ஆகும். அந்த வகையில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு நாம் உதவி தான் செய்கிறோம். அதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகள் வருகிறது. இதனை சீமானின் பார்வையில் பார்க்கக் கூடாது. இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களுக்கானது மட்டும் அல்ல. இந்தியை தாய்மொழியாக கொண்டாத அனைவருக்குமானதாகும். பராசக்தி படத்தில் நிறைய போதாமைகள் உள்ளன. விமர்சனங்கள் உள்ளன. அதேநேரம் இளைஞர்களிடம் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான ஆவலை தூண்டும். இது மொழி சார்ந்த பிரச்சினை அல்ல. உழைக்கும் சமுதாய மக்கள் சார்ந்த பிரச்சினையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ