Homeசெய்திகள்கட்டுரைவிருப்பப்பட்டே உறவு வைத்தாலும்! சீமானுக்கு தண்டனை உறுதி! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்! 

விருப்பப்பட்டே உறவு வைத்தாலும்! சீமானுக்கு தண்டனை உறுதி! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்! 

-

- Advertisement -

நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சீமான் சட்ட ரீதியான பொறுப்புணர்வோடு அணுகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கின் பின்னணியை குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்ளும் விவகாரத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் அதற்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால் சிக்கல் என்ன என்றால்? சம்மதம் எப்படி பெறப்பட்டது என்பது தான். ஒரு பெண்ணிடம் தவறான வாக்குறு கொடுக்கப்பட்டதன் மூலமாகவோ, அச்சுறுத்தல் மூலமாக இப்படி பல்வேறு விதமாக சட்டம் அணுகுகிறது. அதனால் தான் பாலியல் புகார் கொடுத்த பின்னர், அதனை அளித்த நபரே வாபஸ் பெற முடியாது. இதற்கு காரணம் புகார் அளிக்கும்போது தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் அளிக்கின்றனர். அதற்கு பிறகு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆசை காட்டுதல்கள் மூலம் புகாரை திரும்ப பெறுகின்றனர். பாலியல் புகாரை காவல் நிலையத்தில் வைத்து வாபஸ் பெற முடியாது. நீதிமன்றத்தில் சென்று தான் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கும். அதன் பின்னர் மேல்முறையீடு செய்யலாம்.

சம்பந்தப்பட்ட நடிகை தொழில் தொடர்பாக சீமானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளது. ஒரு பெண் விருப்பப்பட்டு உறவு கொண்டாலோ, அல்லது திருமணம் செய்து கொள்வதாக உறுதிஅளித்து, பின்னர் அதனை நிறைவேற்றாததால் நடிகை தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து வளசரவாக்கம் காவல் நிலையம் செல்கிறார். இதன் பின்னர் இது இயல்பாக நீதிமன்றத்தில் முடிய வேண்டும். ஒரு வேலை வழக்கு விசாரணை நடத்திருந்தால் சீமானுக்கு ஆதரவாகக் கூட முடிந்திருக்கும். ஆனால் சீமான் அரசியல் தலைவராக உயர்ந்த பின்னர் நடிகையை சமாதானம் செய்ய முயற்சிகள் நடைபெற்றன. அதை சீமானும் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகை அளித்த இந்த புகாரை வாபஸ் பெற முடியாது என்பது தெளிவானது. இதனால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான்தான் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அரசியல் தலைவரான தனக்கு இந்த புகார் தலைகுனிவை ஏற்படுத்துவதாக கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ரத்து செய்ய முடியாது. ஆனால் நீதிபதி இந்த மனுவை 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

சீமான் 3 மாதம் காலஅவகாசம் உள்ளது ஏன் இவ்வளவு அவசரப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அது தவறு. ஏனென்றால் பூர்வாங்க விசாரணை காவல் நிலையத்தில் முடிக்க வேண்டும். அதன் பின்னர் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சியங்கள் விசாரித்து அதன் பின்னர் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். நீதின்றத்தில் கூட தள்ளுபடி ஆகலாம். அப்படி 3 மாத காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிறபோது காவல்துறை வேகம் காட்டத்தான் செய்யும். வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதனை வாங்கா விட்டால் ஒட்டிவிட்டு செல்வார்கள். சீமான் முதலில் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன் என்று வீர வசனமாகத்தான் சொன்னார். பின்னர் சிலரது சரியான ஆலோசனையின் பேரில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்கு மிகப்பெரிய அளவில் ஆட்களை கூட்டி, கடைகளை அடைத்து ஏகப்பட்ட போக்குவரத்து பிரச்சினை. அத்தோடு முடிந்துவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக என்ன தவறுகள் நடைபெற்றுள்ளது என்றால்? சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவவீரர் அமல்ராஜ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தார். அதனை அவரது சுய பாதுகாப்பிற்காகவே வைத்திருந்தார். அதனை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த முடியாது. நீதிமன்றத்தில் அமல்ராஜ் ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியதை போலீசார் உறுதிபடுத்தினால் தண்டனைக் கிடைக்கும். ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியது உறுதியானால் அவரது உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்படும். ஒட்டப்பட்ட சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன் என்று சீமான் மனைவி கயல்விழி சொல்கிறார். அதனை செல்போனில் படம் எடுத்திருந்தால் அதை எல்லோருக்கும் அனுப்பி இருக்கலாம். ஆனால் சம்மனை கிழித்த விவகாரத்தில் கயல்விழியின் செயல்பாடு அவருக்கு தவறான நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது. அதனால் வளசரவாக்கம் காவல்துறையினர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். அதன் பேரில் நீலாங்கரை போலிசார் விசாரணைக்கு வருகிறார்கள். அப்போது தடுக்கிறார்கள். அதற்கு பின்னர் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது. சீமான் சம்மனுக்கு ஆஜராக முடிவு செய்து இரவோடு இரவாக ஆஜராகிவிட்டார். இது தான் நடைபெற்றது. இனி அரசியல் ரீதியாகத்தான் பார்க்க வேண்டும்.

சட்டத்தை ஆளுவோர் சாதகமாகத்தான் பயன்படுத்த செய்வார்கள். அதிகாரிகளும் அரசுக்குத் தான் விசுவாசமாக இருப்பார்கள். இல்லாவிட்டால் விசுவாசமாக இருக்கும் ஒருவரை அந்த இடத்திற்கு கொண்டு வருவார்கள். நாம்தான் சட்ட நுணுக்கங்களுக்குள் போக வேண்டும். அந்த இடத்தில் ஒரு அரசியல் தலைவருக்கு பொறுப்பு அதிகம். சட்ட ரீதியான பொறுப்புணர்வோடு சீமான் இந்த விவகாரத்தை அணுகவில்லை என்பதுதான் என்னுடைய பார்வை. அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அவருக்கு லாபமா? என்பது அடுத்தக்கட்டம்.

நடிகை விருப்பப்பட்டே உறவு வைத்துக் கொண்டாலும், எந்த நம்பிக்கையை அளித்து அந்த உறவு நடைபெற்றது என்பதையும் பார்க்க வேண்டும். சீமான் மீதான புகாரை  நீதிமன்றத்தில் நடிகை நிரூபிக்க வேண்டும். நடிகை சீமானுடன் மாலை மாற்றிய புகைப்படங்கள் உள்ளதாக சொல்கிறார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். நமக்கு உண்மை எது? பொய் எது? என்று தெரியாது. இதற்கான அதிகாரம் கொண்ட அமைப்பு நீதின்றம்தான். தகுந்த சாட்சிகள் மற்றும் சான்றாவணங்களுடன் அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால் இயல்பாகவே சட்டங்கள் பெண்களுக்கு சாதகமானது. சமுதாயம் பெண்கள் பக்கம் தான் நிற்கும்.

இந்த விகாரத்தில் சீமான் தவறாக கையாண்டுவிட்டார். அரசியல் லாபம் வரும் என்று செய்தாரா என்பதுதான் விவாதத்திற்கு உரிய விஷயம். சீமான் மீதான புகார் என்பது சட்டத்தின்படி நிரூபித்தால் தண்டைக்குரிய குற்றம்தான். நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி என்பது சீமானுக்கு சாதகம்தான். சமூகத்தின் பொதுபுத்தி அரசியலை தொடர்பு படுத்திதான் பார்க்கும். நாம் தமிழர் கட்சி என்பது மக்களை சந்திக்கிற ஒரு அரசியல் கட்சி. சாதாரண மக்கள் என்றால், அரசியல் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. ஆனால் சீமான் வாக்குஅரசியலில் உள்ளதால் சமூகத்தின் பொதுபுத்தி தண்டனைக்குரிய குற்றவாளியாகத்தான் அவரை பார்க்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ