spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!

பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.


பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு – பாஜக கூட்டணி இமாலய வெற்றியை பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது அரசு சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டதாகும். தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு, தனக்கு பதவியை கொடுத்தவர்களுக்கு மிகவும் நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறார். அதனால் பாஜகவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் கேட்காமலேயே செய்து கொடுக்கிறார். பிரதமர் மோடியால் அடையாளம் காணப்பட்டு, தேர்தல் ஆணையராக அழைத்து வரப்பட்ட ஞானேஸ்குமார் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

we-r-hiring

இந்த வெற்றியை பிரதமர் மோடியே, எதிர்பார்த்திருக்க மாட்டார். பாஜக தரப்பில் 120 -130 இடங்கள் வந்தால்கூட, வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திடலாம் என்றுதான் நினைத்திருப்பார்கள். நிதிஷ்குமார், காலை வாரினால் சிராக் பாஸ்வானை வைத்து சமாளித்துவிடலாம் என்பதற்காக தான் அவருக்கு இடம் வழங்கினார்கள்.  நிதிஷ்குமார் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய போதும், அவர் அமோக வெற்றியை பெற்றுள்ளார். கடந்த முறை 43 இடங்களில் ஜேடியு வென்றிருந்த நிலையில், இம்முறை 85 இடங்களை வழங்கியுள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பீகார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினர் என்னதான் முறைகேட்டில் ஈடுபட்டாலும் 100 இடங்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் இவர்கள் 200 இடங்கள் வரை வந்துள்ளது ராகுலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகாரில் ஒரு கோடியே 10 லட்சம் பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதாக கூறி வீட்டிற்கு ரூ.10,000 வழங்கியுள்ளனர். எஸ்.ஐ.ஆர் மற்றும் ரூ.10000 கொடுத்ததன் மூலமாகவே பாஜக – ஜே.டி.யு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்காக தான் 70 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். தேர்தல் ஆணையம் மூலம் ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கே போனாலும் எதுவும் நடக்காது.

பீகாரில் இந்தியா கூட்டணியின் தோல்விக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று காங்கிரஸ் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறது. நடை பயணத்திற்கு பிறகு ராகுல்காந்தி மாறிவிட்டார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராகுல்காந்தி இந்த ஜென்மத்தில் மாற மாட்டார் என்பது பீகார் தேர்தல் காட்டி கொடுத்துவிட்டது. பீகாரில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் வரையிலும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளன்றும் நான் அங்கு தான் இருந்தேன். அப்போது முடிவாகவில்லை.

ராகுலை சந்திக்க தேஜஸ்வி டெல்லி சென்றபோதும் தொகுதி பங்கீடு முடிவாக வில்லை. இப்படி எல்லாம் செய்தால் காங்கிரஸ் கூட்டணி எப்படி தேர்தலில் வெல்லும். பீகார் தேர்தலுடன் காங்கிரஸ் என்கிற கட்சி முடிந்துவிட்டது. இனி பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவாக வேண்டும்.அப்படியான சூழ்நிலைதான் தற்போது உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ்குமார் அரசு வழங்கிய 10 ஆயிரம் மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை இல்லாவிட்டாலே எதிர்க்கட்சிகள் தான் வெற்றி பெற்றிருக்கும். ஞானேஸ்குமார் தேர்தல் ஆணையராக இல்லாவிட்டால், பாஜக என்றைக்கோ காலியாகி இருக்கும். பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளபோதும், ஜே.டி.யு தலைவர் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் ஆக முயற்சிப்பார். காரணம் மத்தியில் ஜே.டி.யு ஆதரவுடன் தான் மோடி அரசு நடைபெற்றறுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று சொல்கிறது. அப்படி சென்றாலும் எதுவும் நடைபெறாது. பீகாரில் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகளையே உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியவில்லை. எனவே வழக்கு தொடர்வதால் உச்சநீதிமன்றத்தால் எதையும் தடுத்துவிட முடியாது.

ஆர்.ஜே.டி ஏற்கனவே 75 இடங்களில் வென்றிருந்தது. நிதிஷ்குமார் அரசு மக்களுக்கு எந்த வித நன்மைகளையும் செய்யாத நிலையிலும், ஆர்.ஜே.டி. 25 இடங்களுக்கு சரிந்துவிட்டதாக சொல்வது ஏற்புடையது கிடையாது. எனவே நிதிஷ்குமார், பாஜகவிடம் இருந்து சென்றாலும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அவரால் ஆட்சி அமைக்க முடியாது. அப்படியான சூழ்நிலையை மோடி – தேர்தல் ஆணைய கூட்டணி ஏற்படுத்தியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ