Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

-

- Advertisement -

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ராஜமன்னார் ஆணையம் அறிக்கை, அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1974 ஏப்ரல் 16ஆம் நாள் தான். இந்த நாள்களில் தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் திமுக பேசியது. இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு அளித்துள்ளோம். இந்தியாவில் அரசு நிர்வாகம் எப்படி இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக தமிழ்நாடு  செய்ததை இன்றைக்கு பாராட்டாதவர்கள் இருக்க முடியாது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி உருவாகியதற்கான அடித்தளத்தை தமிழ்நாடு உருவாக்கி கொடுத்திருக்கிறது. முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு  பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது?

டெல்லி மீடியாக்களுக்கு இந்தியா என்றால் என்ன என்று தெரியவில்லை. இந்தியாவை பற்றிய பார்வை இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் பல்வேறு விதமாக இருக்கும். ஒரு முறை நாடாளுமன்றத்தில் அண்ணா இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக சொன்னார்கள். அப்போது இறையாண்மை என்றால் என்ன? என்று நினைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்டை என் மீது வைக்கிறீர்கள் என்று கேட்டார்.  அரசமைப்பு சட்டப்படி இந்திய மக்களிடம்தான், இந்தியாவின் இறையாண்மை உள்ளது.  நாங்களும் இந்திய மக்கள் தான். எங்களிடமும் இறையாண்மை உள்ளது. நான் ஒரு கருத்தை வைக்கிறபோது அது எப்படி இறையாண்மைக்கு எதிராக போகும்? என்று கேள்வி எழுப்பினார். அரசியல் இறையாண்மை மக்களிடம் உள்ளது. சட்ட இறையாண்மை என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அப்படி எனில் நாங்கள் கூடுதல் அதிகாரம் கேட்பது என்பது இந்த இறையாண்மை அடிப்படையில்தான் கேட்கிறோம்.

anna
anna

மாநில சுயாட்சி கோரிக்கை மற்ற மாநிலங்களில் எழவில்லை என்று சொல்கிறார். அப்படி எழவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள். இந்த கோரிக்கைகளை சரிவர கவனிக்காததன் காரணமாகத்தானே காஷ்மீரில் பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினை, அசாமில் பிரச்சினை, பஞ்சாபில் பிரச்சினை. பிரிவினைவாதம் எப்படி வந்தது? அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை உங்களால் கையாள முடியவில்லை. அதனால்தான் பிரச்சினை வருகிறது. தமிழ்நாடு ஒரு காலத்தில் பிரிவினை கேட்டு, அதன் பிறகு வேண்டாம் என்று முடிவு எடுத்தது.  முடிவு எடுத்த பிறகும் கூட்டாட்சி, தன்னாட்சி அதிகாரம் இரண்டையும் சேர்த்து தானே பேசுகிறோம். இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க வேண்டும். அதில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான போராட்டத்தின் நீட்சி நாம் தான் மண்டல் கமிஷனாக கொண்டு போகிறதில் பெரிய பங்கு வகித்தோம். தமிழ்நாடு மாடல்தான் இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது. குஜராத் மாடலோ, உ.பி. மாடலோ கிடையாது.

தமிழ்நாடு இந்தியாவுக்கு அளித்துள்ள பங்களிப்பு குறித்து ஒரு வார்த்தை பேசாத இந்த ஊடகம், இன்றைக்கு பிரிவினை என்று எப்படி பேசுகிறது? நாம் என்ன பேசுகிறோம் என்பதையே  புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். 1974ஆம் ஆண்டிலேயே இதைதான்  பேசினார்கள். இன்றைக்கும் அதைதான் பேசுகிறார்கள். என்னவோ இந்தியா என்பது டெல்லியில் இருக்கும் அவர்களுககு தான் சொந்தம் என்றும், எங்களுக்கு சொந்தம் இல்லாதது போலவும் பேசுகிறார்கள். உங்களுக்கு எல்லாம் இந்தியா என்றால் என்ன என்று தெரிவதற்கு 300 வருடங்களுக்கு முன்பாகவே ஜம்புத்தீவு பிரகடனம் போட்ட நாடு தமிழ்நாடாகும். தமிழ்நாட்டில் இருந்து கூலிகளாக வேலைக்கு சென்றவர்கள் மலேசியாவில், சிங்கப்பூரில் இருந்துகொண்டு நேதாஜியோடு சேர்ந்துகொண்டு ஐஎன்ஏவில் தான் வேலை செய்தான். தமிழ்நாட்டிற்கு வந்து நீங்கள் எந்த தேசபக்தி பாடமும் எடுக்க வேண்டாம்.

இந்தியாவுக்கு நாடாளுமன்ற ஜனநாயகமாகும். இங்கு அதிகபட்ச அதிகாரம் சட்டம் இயற்றும் அவைகளுக்கு தான் உள்ளது. அதனை நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று பிரித்து வைத்துள்ளோம். நாணயம் அச்சிடுவது, ராணுவம், வெளிநாட்டு கொள்கை போன்றவை மத்திய அரசின் துறைகளாகும். இவற்றில் மாநில அரசுகள் என்றைக்கும் பங்கு கேட்டதில்லை. ஆனால் மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, சாலைகள், தொழில்கள் போன்றவற்றை மாநில அரசுகள்தான் செய்ய முடியும். சீனா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெற்றிகரமான பொருளாதார நாடுகளில் அதிகாரப் பகிர்வு என்பது இருக்கும். மத்திய அரசு சிலவற்றை செய்யும். மற்றவற்றை மாநில அரசுகள்தான் செய்யும்.

ஆனால் பிரதமர் என்ன சொல்கிறார் என்றால் உங்கள் ஊரில் உள்ள பள்ளிகள் குறித்து நான் தான் கவலைப்படுவேன் என்கிறார். பி.எம் ஸ்ரீ என்று பள்ளிக்கூடம் கொண்டுவந்து, என்ன பாடம் நடத்துவது என்று நான்தான் முடிவு செய்வேன் என்கிறார். இதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ்நாடு இவ்வளவு கஷ்டபட்டு வளர்த்த தொழில்துறை வருமானத்தை நீங்கள் கூசாமல் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் அதை எடுத்து காலங்காலமாக பீகார், உ.பிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவுக்கு எது உகந்த ஆட்சி முறை என்றால் கூட்டாட்சி தத்துவம் தான். அதுதான் இந்தியாவின் இயல்பும், பலமும் ஆகும். இதைதான் திமுக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. மத்திய அரசு செய்ய வேண்டியது உலக அளவில் பொருளாதார வல்லமையையும்,, ராஜாங்க ரீதியான உறவுகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு லோக்கல் பிரச்சினையை பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி முன்னேற முடியும். அதுதான் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ