P.G.பாலகிருஷ்ணன் – பொன்னேரி,
இந்து கடவுள்களில் மிக முக்கியமான ஒரு கடவுளாகவும், இந்து மத மக்களால் தனித்துவத்துடன் போற்றுதலுக்கும், வழிபாட்டுக்குரியவராகவும் இருந்து வரக்கூடியவர் ஐயப்பன், இந்து கடவுள்களிலேயே இவருக்கென்று தனி வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஐயப்பனை வழிபட கூடியவர்களுக்கு, மிக முக்கியமாக தனிமனித நல்லொழுக்கங்களும், சுயக்கட்டுப்பாடுகளும் அதிக அளவில் கடைப்பிடிக்க வேண்டும்.

கடவுள் வழிபாடு என்றாலே மனிதர்களை ஒரு விதமான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வியலை நல்வழிப்படுத்தும் வழிபாட்டு முறைகளின் படியே எந்த கடவுள்களையும் வழிபட வேண்டுமென நம் முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். அதனால், கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கை ஒழுக்க நெறியுடன் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐயப்பன் மீது பக்தியுடன் அவரை தரிசிப்பதற்கு செல்ல கூடியவர்கள் பல கடினமான மற்றும் கட்டுப்பாட்டுகளுடன் மாலை அணிந்து விரதங்கள் இருந்து கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற பல விதிமுறைகள் அடங்கிய நீண்ட ஒரு பட்டியல்களே உள்ளன.
இந் நிலையில், ஐயப்பன் கோயில் இருக்க கூடிய சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு தரப்பும், பெண்கள் மற்ற கோவிலுக்கு செல்வதை போல் இந்த கோயிலுக்கும் செல்லலாம் என்று ஒரு தரப்பும் வாதிட்டு வருகின்றனர். இது குறித்த பிரச்சனைகள் கடந்த பல வருடங்களாகவே இருந்து வருவதும், அந்த பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல வழக்குகள் நீதிமன்றங்களிலும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில், அந்த பிரச்சினையை மையப்படுத்தி சில ஆண்டுகளாக இந்து மதத்தில் இருக்கக்கூடிய மற்ற கோவில்களுக்கு பெண்கள் செல்வதை போல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பெண்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் இதே பிரச்சினை குறித்து, கேரளாவில் மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களும் கூட இந்த பிரச்சினையை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக பல அரசியல் நகர்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து, முந்தைய கால கட்டங்களில் எந்த மாதிரியான சூழ்நிலைகள் இருந்து வந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. குறிப்பாக, சபரிமலையின் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என தீவிரமான கட்டுப்பாடுகள் வர துவங்கியது 90களின் காலகட்டத்திற்கு பிறகு தான், அதற்கு காரணம், இந்து மதத்தின் தீவிரவாத அமைப்பு என கூறக்கூடிய,
ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய முகமூடியாக இருந்து வரக்கூடிய பாஜக கட்சியை இந்தியா முழுவதிலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல பிரச்சினைகளை கையில் எடுத்து இந்து மத மக்களுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பாஜக கட்சியை வளர்ப்பதற்கான குள்ளநரித்தனத்துடன் பல குறுக்கு வழிகளில் செயல்பட துவக்கினர். அதற்காக அவர்கள் பல முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்தனர் அதில், ராமர் கோயில் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்தியது மற்றும் நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடுவது போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்தது போல், சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்ற பிரச்சினையையும் தீவிரப்படுத்தி பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேட துவங்கியது தான் அதற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக, 1980 கள் காலகட்டத்திற்கு முன்பாகெல்லாம் சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்ற தீவிரமான கட்டுப்பாடுகள் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. 1986-ம் ஆண்டு கர்நாடகாவின் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயமாலா என்பவரும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்ததுடன் மட்டுமில்லாமல் அவரை தொட்டு வணங்கியதாக்கவும் தெரிவித்திருக்கிறார். அதே ஆண்டில், தமிழ் திரைப்படம் எடுப்பதற்காக நடிகைகள் மனோரமா மற்றும் ஜெயஸ்ரீ, வடிவுக்கரசி உள்ளிட்ட பல நடிகைகள் பதினெட்டாம்படி உள்ளிட்ட பல இடங்களில் நடித்த காட்சிகளின் படபிடிப்புகளும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அதற்கு முன்பாக 1940 ம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராணியாக இருந்த சபரிமாலா கூட கோயிலுக்கு சென்று இருக்கிறார். அதற்கு முன்பாக பல நூற்றாண்டுகளாக சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவளிக்க கூடிய “சொரூனு” என்னும் சுப நிகழ்வுகளும் காலங்காலமாக நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வரலாற்று ஆசிரியரான ராஜன் குருக்கள் என்பவர் கூட, 15 நூற்றாண்டிற்கு முன்பாக சபரிமலையில் பழங்குடி இன மக்கள் அய்யனார் என்ற பழங்குடியின கடவுளின் வழிபாட்டு தளமாக தான் இந்த இடம் இருந்ததாக கூறுகிறார். மேலும், அவர் பெண்கள் மாதவிடாய் இருக்கக்கூடிய காலகட்டத்தையும், கருவுற்று இருக்கக்கூடிய காலகட்டத்தையும் மங்களகரமான காலமாக அந்த காலத்து மக்கள் கருதியிருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.
இவை அனைத்திற்கும் மேலாக, 1990-ம் ஆண்டு காலகட்டம் வரை கூட சபரிமலையில் இந்த பிரச்சனைகள் எழவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணம், 1990 ம் ஆண்டு தேவசம் குழு ஆணையரின் பேத்திக்கு முதல் முதலாக சோறு ஊட்டும் நிகழ்வு சபரிமலை அய்யப்பனின் சன்னிதியில் நடைபெற்றது. அங்கு நடந்த அந்த நிகழ்வில் அவர்களுடைய உறவுகார பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இதை அறிந்த பாஜக முகமூடி அணிந்திருக்க கூடிய ஆர்எஸ்எஸ் கூட்டம் .
உடனே அந்த நிகழ்வு குறித்து, மகேந்திரன் என்பவர் மூலமாக, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம்பெண்கள் செல்வதாகவும், அதனால் பிரம்மச்சாரி கடவுளான ஐயப்பனுடைய புனிதம் கெடுக்கிறது என கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1991-ல் அந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கே.பரிபூரணன் மற்றும் கே.பாலநாரயணன் ஆகிய இருவரும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என தடைவிதித்து தீர்ப்பளித்தனர். அதே வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அதனால், உடனடியாக கேரளாவில் இருந்த ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பல ஒன்றிணைந்து 2018 அக்டோபர் 7ம் தேதி முதல் கேரளாவில் கடையடைப்புகள் மற்றும் பந்துகள் நடத்த துவங்கினர். அந்த தொடர் போராட்டங்கள் 2019 ஜனவரி 3ம் தேதி வரை 7 கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்றது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் கோயிலுக்குள் செல்ல முயன்ற பல பெண் மீது பாஜக கட்சியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் அவர்களுடைய தூண்டுதலின் பேரில், உண்மை நிலவரத்தை உணராத, ஐயப்பன் மீது அதீத ஈடுபாடு கொண்ட சில ஐயப்பா பக்தர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். அதை செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது அரசு பேருந்துகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டது. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் மற்றும் கலவரங்களும் அரங்கேறின, இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு இடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணும், பிந்து அம்பானி மற்றும் கனகதுர்கா ஆகிய பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று திரும்பினர். இந்த நிகழ்வை தொடர்ந்து பல பெண்கள் தொடர்ச்சியாக சபரிமலைக்கு சென்று திரும்பினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாகவும் இந்தியா முழுவதும் பல பெண்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்தும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகுதான் பாஜகவினுடைய போராட்டங்கள் குறைய தொடங்கியது. இது போன்ற இரண்டு தரப்பினர்களுடைய தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களால் கேரளா மாநிலத்தில் வியாபாரிகள் பெரும் அளவில் நஷ்டம் அடைந்ததால், கேரளாவில் 2019ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்புகளுக்கு எதிரான ஆண்டு என வியாபாரிகளே பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த அளவிற்கு ஓங்கி ஒலித்த சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவு பிரச்சனையை, பாஜகவினர் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் கையில் எடுத்து கொண்டு, இந்த பிரச்சனையில் அரசியல் சதுரங்க விளையாட்டு விளையாடுவதை உணராத அப்பாவி ஐயப்பா பக்தர்களையும், ஆன்மீக ஈடுபாடுடன் கடவுள்கள் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்களையும் மூளை சலவை செய்து பாஜக கட்சியை வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் தற்போது கூட, இசைவாணி என்ற ஒரு பாடகர் உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட சூழ்நிலையை உலகிற்கு எடுத்து கூறும் விதமாக, அவர் எப்போதோ பாடிய ஒரு ஐயப்பன் பாடலை இப்போது கையில் எடுத்து கொண்டு, வட இந்தியாவில் அப்பாவி மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பதை போல் இங்கு தமிழ்நாட்டிலும் அரசியல் செய்யும் வகையில், பல ஆயிரக்கணக்கான இந்து கோயில்களின் திருவிழாக்களிலும், விசேஷ தினங்களிலும், அம்மன் மற்றும் பல இந்து கடவுள்களின் பாடல்களை பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில், தொடர்ந்து பாடி வரக்கூடிய, பாடகி இசைவாணி அவர்களை மிகவும் தரம் தாழ்த்தி வசைபாடிக் கொண்டு திரிகின்றனர். இந்த குறுக்கு புத்தி கொண்ட கூட்டத்தின் உள்நோக்கம் புரிந்து கொள்ளாமல் பல பெண்களும் பக்தர்களும் பாடகி இசைவாணியை தாக்கி பேசி வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் இந்த பிரச்சனையை தற்போது கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்னவென்றால், அமெரிக்கா மோடியின் செல்லப்பிள்ளையான அதானி மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அதானியை கைது செய்ய வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. அதற்கு காரணம், அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து அனுமதி பெற்றுள்ளார் எனவும், அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்’ எனவும் நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த பிரச்சினையை நம்முடைய மக்களின் கவனத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காக தான்,

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவாக பாடகி இசைவாணி எப்போதோ பாடிய பாடலை இப்போது பாடியது போல் மக்களிடம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கபடதாரிகளின் இந்த உள்நோக்கத்தை புரிந்து கொண்டு இளைஞர்களும், பெண்களும், ஐயப்ப பக்தர்களும் இசைவாணியை வசைப்பாடுவதை நிறுத்தி விட்டு, நாடு எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எல்லாம் புரிந்து கொண்டு, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் கூறியது போல், இளைஞர்களும், பெண்களும், ஆன்மீகவாதிகளும் நன்கு சிந்தித்து, நம்முடைய வாழ்வியலை ஒழுங்குபடுத்த கூடிய கடவுள் பக்தி நமக்கு கண்டிப்பாக தேவைதான். அந்த ஆன்மீகப் பாதை என்பது ராமானுஜர், ஐயா வைகுண்டர், வள்ளலார் ஆகியோர் வகுத்து கொடுத்த பாதையில் இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய உணர்வுகளை தூண்டிவிட்டு காலம் காலமாக நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு, எதிர்காலத்தில் நம்மை ஒட்டுமொத்தமாக அடிமைகளாக மாற்றி பல நூற்றாண்டுகள் நம்மை பின்னோக்கி அழைத்து செல்ல துடித்து கொண்டிருக்க கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளை தமிழகத்திலிருந்து வேரோடு புடுங்கி அகற்ற வேண்டும்.
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!


