மோடியின் தாயாரை அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி பீகாரில் பாஜக நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பாஜகவுக்கு எதிராக அம்மாநில மக்கள் தன்னெழுச்சியோடு திரண்டு நிற்பதாகவும் ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக சார்பில் நடைபெற்ற பந்த் குறித்தும், வடமாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக எழுந்துள்ள அலை குறித்தும் ஊடகவியலாளர் சதீஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பீகாரில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து விமர்சித்த விவகாரத்தில் பாஜக நடத்திய பந்த் சுத்தமாக எடுபடாமல் போய்விட்டது. பீகார் மக்கள், மோடியின் தாயாரை முதலில் அவமதிப்பு செய்தது பிரதமர் மோடிதான் என்று குற்றம் சாட்டியுள்ளனர். தான் ஒரு மனிதனே இல்லை. ஒரு அவதாரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது 10 மாதங்கள் சுமந்து பெற்ற அவரது தாயாரின் தியாகத்தை அவமதிப்பதாகும். அந்த அளவுக்குதான் அவருடைய நிலை உள்ளது என்று சொல்கிறார்கள். ராகுல்காந்தியோ, காங்கிரஸ் தலைவர்களோ பிரதமர் மோடியின் தாயாரை விமர்சிக்கவில்லை. படித்த இளைஞர் ஒருவர் இதுநாள் தான் பாஜகவுக்கு வாக்களித்து வந்ததாகவும், இனிமேல் ஆர்.ஜே.டி- மாறிவிடலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், அந்த அளவுக்கு பாஜக அநியாயம் செய்வதாக சொல்கிறார். கர்ப்பிணி பெண்ணை, ஆட்டோக்காரர் ஒருவர் இலவசமாக ஆட்டோவில் ஏற்றிச்சென்றுள்ளார். அவரை பந்த் நடத்தியவர்கள் மறித்த நிலையில், அதை தட்டிக்கேட்ட பெண் ஒருவரை சாலையில் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பாஜகவை எப்படி மக்கள் ஆதரிப்பார்கள்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை காரணமாக மக்கள் வாக்குரிமையை இழந்து, குடியுரிமையை இழக்கும் அச்சத்தில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் வாக்கு திருட்டு விவகாரத்தை ராகுல்காந்தி எடுத்துக்கொண்டு வருகிறபோது, பீகாரில் உள்ள சாதாரண மக்களிடம் பெருங்கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பிறகுதான் அவர்கள் நாம் எவ்வளவு மூடத்தனமாக நிதிஷ்குமாரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார் என்பதை சிந்திக்கிறார்கள். அதற்கு தன்னெழுச்சியாக அவர்களாக திரண்டு ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து மோடி, பாஜக கும்பல் மிரண்டு போய் நிற்கிறது. பீகாரின் சமூக ஊடகங்கள் மோடி, ஜெய்ஸ்ரீராம் என்று வீடியோக்கள் வந்த நிலையில்,, தற்போது ஆர்ஜேடி, ராகுல்காந்தி என்று ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. அதேபோல், தொலைக்காட்சி நேரலை விவாதங்களிலும் ஆர்.ஜே.டி தரப்பில் பாஜக – நிதிஷ்குமார் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாஜக எந்த சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ச்சி பெற்றதோ, அதே சமூக ஊடகங்களின் வாயிலாகவே அம்பலப்பட்டு நிற்கிறது.
பீகாரில் அம்மா சென்டிமெண்டை வைத்து பாஜக அரசியல் செய்ய முயற்சித்தது, பேக் பையர் ஆகிவிட்டது. அதற்கு காரணம் வறுமையில் உள்ள பீகார் மக்களிடம் சென்று, மோடியின் அம்மாவை திட்டிவிட்டார்கள். கடையை மூடுங்க என்று சொன்னால், அவர்கள் திட்டியவனிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிட்டனர். பீகாரில் மக்களின் உழைப்பு பெரிய அளவில் சுரண்டப்படுகிறது. அந்த மக்களின் குடும்ப வருமானம் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்தான். மூன்றில் ஒரு பங்கு பேருக்கு மாத வருமானம் 6 ஆயிரம் தான். இப்படி இருக்கும் மக்களிடம் சென்று ஸ்டிரைக் செய்ய சொன்னால் என்ன செய்வார்கள்? ஓரிடத்தில் பாஜக பந்தில் கூட்டமே இல்லாத நிலையில், அங்குள்ள கடைகளை சென்று மூடுமாறு தகராறு செய்கின்றனர். மோடியின் தாயார் குறித்து பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து, கைதுகூட செய்து கொள்ளலாம். ஆனால் யாரோ ஒருவர் பேசியதற்காக, இவர்கள் பந்த் நடத்துவதை பீகார் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சியின் மேயராக பாஜகவை சேர்ந்த புஷ்யமித்ர பார்க்கவ் என்பவர் உள்ளார். அவரது மகன் சங்கமித்ர பார்க்கவ், கல்லூரியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மோகன் யாதவ் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் பேசிய சங்கமித்ர பார்க்கவ் மொத்தமாக பாஜகவை முடித்துவிட்டார். இன்றைக்கு ரயிலில் செல்வதாக இருந்தால் மக்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டுதான் செல்கின்றனர். அந்த அளவுக்கு ரயில் விபத்துக்கள் நடக்கின்றன. 55 லட்சம் பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளனர். இந்த அளவுக்கு தான் ரயில்வே துறையின் லட்சனம் உள்ளது என்று விமர்சிக்கிறார். ரயில்வே துறைக்கு மோடி பட்ஜெட்டில் 1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். ஆனால் அதில் 80 சதவீதம் செய்ய இல்லை. 72 சதவீதம் பாதுகாப்பு துறைக்கு செய்ய வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். ஒரு ரயில் பெட்டி தடம் புரள்கிறது என்றால், அந்த பெட்டியில் சென்ற அத்தனை பேரின் வாழ்க்கையும் தடம் புரள்கிறது என்று சொல்கிறார். அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் கைத்தட்டுகிறார்கள். பீகாரில் ஒரு பக்கம் சாதாரண மக்கள் அடித்து துவைக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் பாஜக மேயரின் பையன், முதலமைச்சர் முன்பாகவே பாஜகவை காலி செய்கிறார். இப்படியான சூழலில் மோடி எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாமல் இங்கே வந்து சோகமாக சீன் போட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது பிரதமர் மோடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் மக்கள் கொடுத்த அடி, ம.பி. சிறுவன் கொடுத்த அடி, ராகுல்காந்தி, தேஜஸ்வி போன்றவர்கள் எழுப்பிய கேள்வியால் மோடி பதறி போய் நிற்கிறார். மணிப்பூருக்கு கடந்த வாரமே பிரதமர் மோடி செல்ல வேண்டிய நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது. பல முறை இதுபோன்ற தகவல்கள் வரும். ஆனால் தற்போது வரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. மணிப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டனர். தற்போது மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் புதிதாக ரயில் பாலம் செப்டம்பர் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். அப்போது அசாம் மாநிலத்திற்கும் செல்கிறார். அப்படி செல்கிறபோது மணிப்பூருக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்துள்ள தகவல் என்ன என்றால்? மணிப்பூரில் தலைமை செயலாளர் தலைமையில் ஆக.30ல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் செப்டம்பர் 14ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என்று உத்தரவிட்டு உள்ளனர். அதற்கு காரணமாக விவிஐபி வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, என்ன அர்த்தம்?
சூராசந்த்பூரில் 15 ஆயிரம் பேர் கூடுகிற அளவுக்கு மைதானத்தை தயார் செய்து வருகிறார்கள். பாதுகாப்பை பலப்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தி வயர் இதழில் தெரிவித்துள்ளனர். அப்படி அவர் மணிப்பூர் சென்றாலும் இரு சமுதாய மக்களையும் அழைத்து பேச மாட்டார். வேண்டுமெனில் நீலிக்கண்ணீர் வடிக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே, குஜராத்தின் மோடி மணிப்பூர் வந்தால் முதலில் இந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லி உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் 250 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். முகாம்களில் வசிப்பவர்கள், தங்களை இருப்பிடங்களுக்கே திருப்பி அனுப்புமாறு கேட்கிறார்கள். எனவே அரசியல் மடைமாற்றத்திற்காகவே செல்கிறார். அந்த மக்களின் மீது உள்ள அக்கறை காரணமாக அவர்கள் செல்லவில்லை. இத்தனை வருடம் செல்லாத பிரதமர் தற்போது ஏன் செல்கிறார் என்றால்? வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி கொடுத்திருக்கும் அடி சாதாரணமானது அல்ல. அவரது சான்றிதழ் போலியானது என்கிற விவகாரம் உள்ளது. அதுபோக இன்னும் 3 மாதத்தில் மோடியின் சகாப்தம் முடியப் போகிறது, பாஜக அரசு கவிழ்வதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் தன்னுடைய பேட்டியில் சொல்கிறார். அப்போது மோடியின் பலூன் இத்தனை ஆண்டுகள் ஓடியதே பெரிய விஷயம். தற்போது அதை எல்லாம் கிழித்து காயப்போட்டு கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.