spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"அன்புமணி சிறைக்கு செல்லட்டும்"! ராமதாஸ் பகீர் வார்த்தை! தைலாபுரத்தில் நடந்த ரகசிய சந்திப்பு!

“அன்புமணி சிறைக்கு செல்லட்டும்”! ராமதாஸ் பகீர் வார்த்தை! தைலாபுரத்தில் நடந்த ரகசிய சந்திப்பு!

-

- Advertisement -

பாஜக கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சி தான் தற்போது ராமதாஸ் – அன்புமணி ஆகியோர் இடையே நடக்கும் யுத்தம் என்று எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமகவில் மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவி வரும் மோதலின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவை பொருத்தவரை யாருடன் கூட்டணி சேர்வது என்பதில் நாட்டிற்கே வழிகாட்டி அவர்கள்தான். மருத்துவர் ராமதாஸ் அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே திமுகவிடம் சேர்வார். திமுகவிடம் கூட்டணி பேசிக்கொண்டே அதிமுகவில் சேர்வார். தேசிய கூட்டணியில் பாஜகவில் கரைந்து போவதன் மூலம் பாமக பெரிய பின்னடைவை சந்திப்பதாக ராமதாஸ் கருதுகிறார். தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்று வலிமையை நிரூபித்துள்ளேன். ஆனால் அன்புமணி கூட்டணி வைத்து 5 கடைசியாக 5 தொகுதிகளை தான் வைத்துள்ளார். அப்போது கூட்டணியால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்புகிறார். மருத்துவர் ராமதாஸ், எந்த கூட்டணியின் பக்கம் போனால், அரசியல் ஆதாயம் கிடைக்கும். அறுவடை எங்கு நடக்கும் என்று அவருக்கு துல்லியமாக தெரியும். அந்த புத்திசாலித்தனம் அன்புமணியிடம் இல்லை என்று நினைக்கிறார்.

பாமகவை முழுமையாக அன்புமணியிடம் ஒப்படைத்து தான், அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினார்கள். வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்றார்கள். தற்போது வன்னியர் ஓட்டு வன்னியர்களுக்கு இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. அரசியல் ரீதியாக பாமகவுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு விட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அதிகார அமைப்பிற்குள் எவுதும் இல்லை. அந்த கட்சி லெட்டர் பேட் கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதைதான் மருத்துவர் ராமதாஸ் சொல்கிறார். 2006 காலகட்டத்தில் பாமகவில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுக அரசை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் போல செயல்பட்டார்கள். மத்திய அமைச்சர்களாக ஏ.கே.மூர்த்தி, அன்புமணி இருந்துள்ளனர். கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்த்தால் பாமக பின்னடைவை சந்தித்து கொண்டே செல்கிறது.

பாமகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் பாமகவின் நடவடிக்கைகள் தான். தருமபுரியில் 3 தலித் கிராமங்களை தீவைத்து கொளுத்தியது. தலித் அல்லாதோரை ஒன்று கூட்டுகிறேன் என்று சாதி சங்கங்களுடன் பயணித்ததாக இருக்கட்டும். அவர்களது அணுகுமுறை ஈழ இறுதி யுத்தத்திற்கு பிறகு கட்சி பின்னடைவை சந்தித்துவிட்டது. கட்சியை காப்பாற்ற முடியாது என்கிறபோது அவர்கள் தொடங்கிய இடமான வன்னியர் சங்கத்தில் இருந்து தொடங்குவோம் என்று போனார்கள். அது அவர்களுக்கு ஜனநாயக சக்திக்கான ஒரு இடமாக இல்லாமல் போய்விட்டது. ராமதாஸ் அரசியலை அணுகும் விதத்திலும், அன்புமணி அரசியலை அணுகும் விதத்திலும் மாறுபாடு உள்ளது.

ராமதாஸ் செயல்படுகிற காலத்தில் அனைவரும் அவர் பக்கம்தான் நின்றார்கள். அவர் தான் அனைத்து அதிகாரங்களையும் கைமாற்றி, அன்புமணியிடம் கொடுத்தார். அன்புமணி கட்சியை நடத்தும் விதம் குறித்து அவருக்கு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இவர் தலைவராகிய பின்னர் கட்சியை ஒரு முறை கூட வெற்றிபெற வைக்க முடியவில்லை. மருத்துவர் ராமதாஸ் கடந்த முறையே பாஜகவுடன் கூட்டணியில் போகக் கூடாது என்று சொல்லியுள்ளார். அது நமக்கு செட் ஆகாது என்று சொல்லியுள்ளார். ஆனால் அன்புமணி உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் தனக்கு சிபிஐ வழக்கு உள்ளது. தான் சிறைக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறபோது, நீ சிறைக்கு போ. கட்சியை காப்பாற்று என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராமதாஸ் வந்துவிட்டார். அதுதான் மிக முக்கியமான முரண்பாட்டிற்கு அடிப்படை. பாஜக கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சி தான் தற்போது அவர்கள் இருவர் இடையே நடக்கும் யுத்தமாகும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளில் ஓரளவுக்கு தாக்குபிடித்து இருக்கும் என்று நிரூபித்த கட்சி பாமக. அதை பார்த்து தான் மதிமுக, தேமுதிக, நாதக. இந்த நம்பிக்கையின் தொடர்ச்சி தான் தமிழக வெற்றிக்கழகம். சித்திரை முழு நிலவு மாநாட்டில் நாம் அக்கினி சட்டியில் பிறந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அதை படித்த இன்றைய இளைஞர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள். பாமக தொடங்குகிற போது இவர்களது சொத்து மதிப்பு என்ன? இன்றைக்கு சொத்து மதிப்பு என்ன? சமூகநீதி போராட்டத்தில் 28 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பங்களின் நிலை என்ன? ராமதாசின் குடும்பத்தின் நிலை என்ன? என்று காடுவெட்டி குருவின் மகள் பேசுகிறபோது பொது சமுதாயம் மட்டும் இன்றி வன்னிய சமுதாயமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. இவர்கள் பின்னால் செல்வதன் மூலம் எந்த மாற்றமும் நிகழாது என்று உணர்ந்துவிட்டனர்.

ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு 216 பேர் வரவேண்டிய நிலையில் 16 பேர் கூட வரவில்லை. இதன் மூலம் கட்சியில் தனக்கு 100 சதவீதம் செல்வாக்கு இல்லை நிரூபித்துவிட்டார். நிகழ்கால அரசியல் என்பது அன்புணியிடம் உள்ளது.  பாமக இரு தரப்பாக செயல்படுவது அவர்களுக்கு ஒரு வசதி உள்ளது. இருபுறமும் கூட்டணி கதவுகளை திறந்துவைத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு புறம் பேசலாம். பாஜகவிடம் சென்று உங்களுக்காக தான் என் தந்தையை பகைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்லலாம். இந்த முரண்பாட்டை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள். இது பிளவு அரசியலாக மாறாது. இவர்கள் இருவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு கட்சியினருக்கு தான் மனநெருக்கடி. இவர்களுக்கு உள்ளேயே அடித்துக்கொண்டால் வாக்கு வங்கி குறைந்துவிடும். இதுதான் அதிமுகவுக்கு நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை விட இன்னும் மோசமான சரிவை தான் பாமக 2026 தேர்தலில் அடையும்.

"நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: DMK

மருத்துவர் ராமதாசுக்கு திமுக கூட்டணி தான் விருப்பமாக உள்ளது. திமுக உடன் கூட்டணியில் இருந்தபோது எல்லாம் அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துள்ளது.  திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோதும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்ததால் அவர்களுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. 2 திராவிட கட்சிகளுடன் இணக்கமாக இருக்கும்போதெல்லாம் ராமதாஸ் அரசியல் அறுவடை செய்துள்ளார். 2 கட்சிகளையும் கைவிடுகிறபோது பாமகவுக்கு தேய்பிறை காலமாக மாறிக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் மதச்சார்பற்ற கூட்டணியாகும். ஆனால் பாமகவுக்கு அப்படி தெளிவான அரசியல் நிலைப்பாடு கிடையாது. மருத்துவர் ராமதாஸ் சமூகநீதி பாதையில் இருந்து விலகி, சாதிய ரீதியாக பிற்போக்குத்தனமாக சென்றதால் வீழ்ந்துவிட்டனர். அதனால் கட்சி வளர்ச்சி அடையவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ