Homeசெய்திகள்கட்டுரைநிதிஷ், நாயுடு... அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

நிதிஷ், நாயுடு… அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

-

- Advertisement -

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு, தனது  ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக  மக்கள் ஆய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் ச. ராஜநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகளும், அதன் பின்னணி குறித்தும் விளக்கம் அளித்து பேராசிரியர் ச. ராஜநாயகம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில், மீண்டும் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்க வேண்டியதன் அவசியம் என்ன? யாருக்கு அந்த அவசியம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கு ஏற்பட்டது. ஓராண்டுக்கு பின்னர் நடத்தியிருந்தால் ஓராண்டு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். மூடு ஆஃப் தி நேஷன் எப்போது வர வேண்டும் என்றால் தேர்தலை முன்னிட்டு வர வேண்டும். இப்போது தேர்தல் நடப்பதற்கான சூழல் இல்லை. அப்போது இந்த கேள்வி வந்ததற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்றால்,  நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு வந்துள்ளதாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதேவேளையில் மத்திய ஆட்சியில் உள்ள பாஜக தனிப் பெரும்பான்மை இன்றி தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 பெரிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி புரிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இருப்பதால் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தனிப்பெரும்பானமையுடன் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதன் மூலம் ஒரு செய்தி போகிறது. அதற்காக தான் இவர்கள் செய்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நிதிஷ்குமாருக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என்ன செய்தி போகிறது என்றால், உங்கள் தயவில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள். அப்படி நீங்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்தீர்கள் என்றால் இன்றே ஆட்சியை கலைத்துவிட்டு திரும்ப தேர்தல் நடத்தினால், நீங்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள். மீண்டும் பெரும்பான்மையோடு மோடி ஆட்சித்தான் வரும். அதனால் அடக்கிவாசியுங்கள் என்று ஒரு செய்தி சொல்வதாக தான் தோன்றுகிறது.

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்த்தால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் ஆகிய இருவரும் சரி கொஞ்சம் இறங்கி செல்வோம் என்று தான் எண்ணுவார்கள். இந்த ஆட்சி காலத்தில் நமக்கும், மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொண்டு ஆட்சி சுமூகமாக நடக்க வழிவகை செய்யலாம் என்றுதான் முடிவு எடுப்பார்கள். தேசிய அளவில் மோடியின் இமேஜ் சரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அப்படி எல்லாம் ஒன்றும் சரியவில்லை. அவர் இமேஜ் மீண்டும் பெரிதாகிவிட்டது. 2014, 2019 தேர்தலின்போது இருந்த மோடியாக உருவெடுத்துவிட்டார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவில் திமுக கூட்டணிக்கு வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் குறைகிறது. அதேவேளையில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து, அதிமுகவை விட கூடுதலாக உள்ளது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது. இதனை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் மனநிலையில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாலான கட்சிகள் இன்று அதனை ஏற்கும் மனநிலைக்கு வந்துவிட்டன. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முன்னிலையில் இருப்பது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தான். அவர்களிடம் கணிசமான அளவில் எம்.பிக்கள் உள்ளனர். தமிழகத்திலும் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்பதுதான். இதில் திமுக வெல்லும் என்று முடிவுகள் வந்துள்ளன. இதன் வாயிலாக திமுகவுக்கு சொல்லப்படும் செய்தி என்ன என்றால்? தேவை இல்லாமல் மோதல் எதற்கு. இன்று தேர்தல் நடைபெற்றாலும் நீங்கள்தான் ஜெயிக்கப் போகிறீர்கள். தேசிய அளவில் முன்னணி முதலமைச்சர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள். அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் கையொப்பம் எதும் போட்டுவிடுங்கள் என்று சிஓட்டர் கருத்துக்கணிப்பு சொல்கிறதோ என்று தோன்றுகிறது.

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி சாத்தியமா?- தராசு ஷியாம் விளக்கம்

இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வி எதுவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தானே நடைபெற உள்ளது. அப்போது சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்றால் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்டிருந்தால் கண்டிப்பாக நான் சொல்கிறேன் பாஜக, அதிமுகவை விட வாக்கு சதவீதம் அதிகமாக வாங்கவே முடியாது. அந்த நிலவரமே கிடையாது. திமுக முதலிடத்தில் இருக்கும் ஆனால் வாக்கு சதவீதம் 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு உயர்ந்திருக்காது. அதற்கு வாய்ப்பே கிடையாது. திமுக சரிவைத்தான் இன்று வரை சந்தித்துள்ளது. அடுத்து வரப்போற காலத்தில் ஏதாவது செய்தால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று நிலைப்பாடு வந்தால் அது உயர வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய கள ஆய்வுகளில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே தான் வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக சொல்கிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.  அப்படி வழங்காவிட்டால் எந்த அணி கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்கிறதோ, அந்த அணிதான் 2026ல் ஆட்சிக்கு வரும். மக்கள் மத்தியில் இதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ