spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!

கடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!

-

- Advertisement -

பீகாரில் நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், அவரது பதவி வெறிக்கான எதிர்வினையை தற்போது அனுபவித்து வருவதாகவும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக – ஜேடியு கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. இதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பீகார் மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் பாஜக – ஜேடியு கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரை, அமித்ஷா அறிவிக்கவில்லை என்றும், தேர்தலுக்கு பிறகு முதலமைச்சரை அறிவிக்கலாம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில் நிதிஷ்குமார், கூட்டணியில் பாஜகவை விட தங்களுக்கு ஒரு இடமாவது கூடுதலாக தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பீகார் அரசியல்தான் என்.டி.ஏ கூட்டணி, எவ்வளவு பெரிய மோசமான கூட்டணி என்பதற்கான ஒரு உதாரணமாகும். ஒரு காலத்தில் நிதிஷ்குமார் ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்ட கட்சி பாஜக. அதன் பிறகு நிதிஷ்குமாரும், பாஜகவும் உட்கார்ந்து பேசி இடங்களை பகிர்ந்துகொண்ட காலங்கள் உண்டு. தற்போது கடைசியாக பாஜகவோடு தனக்கு ஒரு இடம் கூடுதலாக தர வேண்டும் என்று நிதிஷ் சொல்கிறார். இதன் மூலமாக பாஜக தான் இந்த முறை கூட்டணியின் தலைமை என்று நீங்கள் அறிவித்துவிட்டீர்கள் என்று தான் பொருள் கொள்ளப்படும்.

ஜேடியு – பாஜக கூட்டணி நிதிஷ்குமாரை முன்னிறுத்தி தானே தேர்தலை சந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படிதானே தேர்தலை சந்தித்துள்ளீர்கள். அப்போது இந்த தேர்தலில் மட்டும் புதிய வியூகம் என்பதை போன்ற புதிய  தோற்றத்தை உருவாக்குவது நிதிஷ்குமாரை பல்லை பிடுங்குகிற வேலையாகும். நிதிஷ்குமார் ஏற்கனவே ஓய்வு முடிவுக்கு வந்துவிட்டார். அவருடைய மகன்தான் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின்றன. இம்முறை சிராக் பாஸ்வான் 40 இடங்கள் வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் நிதிஷ் 20 இடங்கள் தான் தருவோம் என்கிறார். அப்போது சிராக் பாஸ்வானை வைத்து மீண்டும் கொம்பு சீவுகிற வேலையை செய்கிறார்களா? என சந்தேகம் எழுகிறது. மற்ற கட்சிகளை எல்லாம் பேசி சமாளிக்க முடிந்த பாஜக-வால் சிராக் பாஸ்வானை சமாளிக்க முடியாதா?  சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, சட்டமனறத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்கிறார். அப்போது அவர் என்ன துணை முதலமைச்சர் வேட்பாளரா? எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தங்களுக்கு 40 எம்எல்ஏக்கள் வேண்டும் என்று சொல்கிறார். அப்போது என்ன கணக்கை நோக்கி நகர்கிறது இந்த கூட்டணி?

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

டெல்லியில் நடைபெற்ற கூட்டம் என்பது நிதிஷ்குமாருக்கு அழுத்தம் தருவதற்கான கூட்டமாகும். அதை உணர்ந்ததால்தான் நிதிஷ்குமார் தனக்கு ஒரு இடமாவது கூடுதலாக தர வேண்டும் என்று சொல்கிறார். நிதிஷ் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவராக பீகாரில் இருந்தவர். அவர் எடுத்த தவறான முடிவுகள் காரணம் இன்றைக்கு அதற்கான பலன்களை அனுபவிக்கிறார். ஒருவேளை தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றாலும் அவர் துணை முதலமைச்சர் ஆக தான் அமர்த்தப்படுவார். அடுத்தகட்டமாக பீகாரில் பாஜக தலைமையிலான ஆட்சி என்கிற நிலைமையை நோக்கி நிதிஷ்குமாரை தள்ளுகிறார்கள்.

இதனிடையே, நிதிஷ்குமாரின் கட்சியை காப்பாற்ற அவரது மகன் நிஷாந்த் குமாரை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற குரலும் எழுந்துள்ளது. ஜேடியுவை வீழ்த்த வேண்டும் என்பது தான் பாஜகவின் பிரதான நோக்கமாகும். வாரிசு அரசியல் என்று சொன்னால் இன்னும் பலவீனமடையும் என்று நினைக்கிறார்கள். ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் என்கிற ஒற்றைத் தகுதியில் வந்தவர் சிராக் பாஸ்வான். அவரை பாஜக மத்திய அமைச்சர் ஆக்கியது.  ஜேடியுவை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, அவர்கள் கரைந்து போன இடத்தில் இருந்து புதிதாக முளைத்து வந்தவர்கள்தான் பாஜகவினர். இல்லாவிட்டால் அவர்களுக்கு பீகாரில் அரசியல் எங்கே இருக்கிறது?

நிதிஷ்குமார் மகனை தேர்தலில் நிறுத்தினால், பாஜகவுக்கு 2 லாபங்கள் உள்ளன. ஒன்று தோல்வி அடைந்தால், வாரிசு அரசியல். ஜேடியுவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று சொல்லலாம். மற்றொன்று குறைவான இடங்களில் ஜேடியு வெற்றி பெற்றால், நிதிஷ்குமார் துணை முதலமைச்சர் ஆக முடியாது. அவருடைய ஈகோ தடுக்கும். அவருடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கிவிட்டு, பாஜக முதலமைச்சர் ஆகிவிடலாம். இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக தான், நிதிஷ்குமாரின் மகனை கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்கள். பீகாரில் நடைபெறும் அரசியல் குழப்பங்கள் எல்லாம் நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய பின்னடைவை தர காத்திருக்கும் காரணிகளாக தான் நான் பார்க்கிறேன்.

மறுபுறம் இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவை முன்னிலைப்படுத்தி ராகுல்காந்தி ஒரு யாத்திரை செல்கிறார். அந்த பயணம் மிகப்பெரிய வெற்றி அடைகிறது. அது பீகார் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. அந்த நம்பிக்கைதான் எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க தயார் படுத்துகிறது. பீகாரில் ஒரே நாளில் 65 லட்சம் வாக்களார்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை ராகுல்காந்தி சிறப்பாக காய் நகர்த்தி  வெற்றி பெற்றிருக்கிறார். இது தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ