சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது மிகப் பெரிய திருப்புமுனை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்தார்.
தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது மிகப் பெரிய திருப்புமுனை ஆகும். பெரிய நிதி மசோதாக்கள், மத்திய அரசின் சட்ட ஆலோசனை தேவைப்படுகிறது அல்லது பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விவகாரம் தொடர்பாக சட்டம இயற்றுகிறோம் என்றால் 3 மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இந்த 3 மாத காலம் ஆளுநருக்கு மட்டும் அல்ல. குடியரசுத் தலைவருக்கும் பொறுந்தும். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 3 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிவடைய வேண்டும். இதில் ஆளுநர் கால தாமதத்திற்கு எந்த காரணம் சொல்ல முடியாது. ரீசனபுள் டைம் என்று சொல்கிறார்கள். ஒரு அதிகாரியிடம் அனு அளிக்கும்போது, அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போது அவரது மனு எனது டேபிளில்தான் உள்ளது. எனக்கு தோன்றுகிறபோது தான் நடவடிக்கை எடுப்பேன் என்று அந்த அதிகாரி சொன்னால், பொதுமக்கள் ரிட் மனு போட்டு வழக்கு தொடர்வார்கள். நாங்கள் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று வருவார்கள்.
உயர்நீதிமனறம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்து. ஒரு சில விஷயங்கள் குடியரசுத்தலைவரிடம் போய்விட்டு வந்தது என்றால்? எப்போது சட்டவிரோதமாக செயல்பட தொடங்கினார்களோ, அதற்கு பிறகு நடைபெற்ற சம்பவகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமனறம் சொல்லியுள்ளது. அதன் காரணமாக அனைத்தும் சட்ட விரோதம் என்றாகிவிட்டது. இந்த விகாரத்திற்கு ஆளுநர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் குடியரசுத் தலைவர் அவரை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். காரணம் இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினையாகும். தகுதி இல்லாத நபருக்கு விருப்பத்தின் அடிப்படையில் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றாகிவிடும். தமிழக அரசு – ஆளுநர் இடையிலான பிரச்சினைகளை களைய உச்சநீதிமன்றம் பஞ்சாயத்து செய்தது. ஆயினும் ஆளுநர் திருந்தவில்லை. அப்போது, அவர் சரியான நபர் இல்லையா?
ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்கள் குறித்து சொல்வதை விட வடலூர் வள்ளலார் குறித்தோ, ஐயா வைகுண்டர் பற்றியோ அவர் சொல்வதை தனது சொந்த கருத்துக்கள் என்று கூறுகிறார். அவருக்கு சொந்த கருத்துக்கள் சொல்ல உரிமை கிடையாது. ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கு உதவிக்கரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தனது கடமையை நிறைவேற்ற வில்லை. ஆர்.என்.ரவி என்பவர் தகுதித இல்லாத நபர் ஆவார். தகுதி இல்லாதவரை எதற்காக குடியரசு தலைவர் ஊக்குவிக்கிறார்கள். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் தான் உள்ளார். எந்த அடிப்படையில் அவர் சம்பளம் வாங்குகிறார். தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அதனை குறிப்பிடவில்லை. ஆனால் தற்போது அவருடைய பதவிக்காலம் முடிடைந்துவிட்டது. அப்போது ஆர்.என்.ரவி எதற்காக நீடிக்க வேண்டும்? அப்போது, எதோ ஒரு முடிவை விரைவில் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.
அழுகிறவர்கள் அழுதுகொண்டே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படி அல்லல்பட்டு அழுதவர்களின் கண்ணீரை பார்த்து உச்சநீதிமன்றம் கைகுட்டை கொடுத்திருக்கிறதே அது என்ன கதை? அப்போது யார் அழுதார்? தமிழ்நாடு ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளது. அந்த அரசாங்கம் பொறுப்பில் இருக்கும் வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தான் காரியங்களை நிறைவேற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் நலனை புறக்கணித்தார்கள் என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் விடை கொடுக்கப் போகிறார்கள். நீங்கள் யார் விடை கொடுப்பதற்கு? உங்களுக்கு விடைத்தாள் திருத்தும் உரிமை கிடையாது. நீங்கள் விடைத்தாளை கட்டிவைக்கும் ஆள்தான். அதைதான் உச்சநீதிமன்றமும் சொல்கிறது ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று. ஆளுநர் வழிகாட்டியாக இருக்கலாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் கண்களை திறக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டுகிற பட்டியலில் குடியரசுத் தலைவரும் உள்ளார். இது ஆளுநருடைய தவறாகும். அவர் தனது செயல்கள் மூலமாக இந்த நாட்டின் உயரிய பதவிக்கு இழுக்கு தேடி தந்துவிட்டார். எனவே இயல்பாகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். அப்படி நிறைவேற்ற வில்லை என்றால் இதுவரை எடுத்த நடவடிக்கை எல்லாம் அரசியல் நோக்கத்திற்கானது ஆகும். ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சொல்வது சரிதான். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் மாநிலத்தின் நலன்களுக்கு உகந்தது அல்ல.

அனைத்து மாநிலங்களிலும் புதிதாக அரசு பொறுப்பேற்கும்போது அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். அரசுக்கு நம்பிக்கையானவர்களை உயர் பதவிகளில் வைக்கும்போது இயல்பாக அதிருப்தி அதிகாரிகள் கூட்டம் வந்துவிடும். எப்போது மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்படுகிறதோ அப்போது அதிருப்தி அதிகாரிகள் எல்லாம் அங்கே போவார்கள். அவர்கள் எதாவது குட்டையை குழப்பி கொண்டே இருப்பார்கள். அரசியலமைப்பின் படி ஆளுநர் பதவிக்கு நாம் உயரிய மரியாதையை அளிக்க வேண்டும். அப்படி மரியாதை அளிக்க வேண்டுமெனில் அதற்கு உகந்தவர்களாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஆர்.என். ரவி அப்படி நடந்துகொண்டது கிடையாது. நாகாலாந்தில் இவரை அடித்து துரத்தாத குறைதான். அப்படி இருக்கும்போது யார் யாருக்கு என்ன என்ன அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகியுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.