Homeசெய்திகள்கட்டுரைவீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

-

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு இருந்தது. அதன் பின்னர் இரு அமைப்புகளுக்கு இடையே தற்போது எழுந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப்படையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மணிப்பூர் மதக் கலவரத்தில் தீ பற்றி எரிந்தது. இப்பொழுதும் அந்த தீ அணையவில்லை. 100 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டார்கள். பிணங்களை எடுத்து முறையாக அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்தார்கள். மசூதிகளும், சர்ச்களும் தீக்கரையானது. இரண்டு பெண்களை நிர்வாணப் படுத்தி ஒரு கிராமமே ஊர்வலமாக அழைத்து சென்றது. மனித இனத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் இந்த காட்டுமிராண்டி தனமான செயலை மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு போகவில்லை. மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

அதனை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் நடந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட மோடியோ அல்லது அவருடைய கட்சியை சார்ந்த சகாக்களோ மணிப்பூருக்கு செல்லவில்லை. தேர்தல் முடிந்தது. மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்றுக் கொண்டார்.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள தனது சக அமைப்பு நண்பருக்கு மோகன் பகவத் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக கண்டித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். அது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் கடந்த ஒரு வருடமாக அமைதிக்காக காத்திருக்கிறது. அந்த மாநிலம் கடந்த 10 வருடங்களாக அமைதியாக இருந்தது. பழைய துப்பாக்கி கலாச்சாரங்கள் முடிவிற்கு வந்ததாக தோன்றியது. ஆனால் திடீரென உருவாக்கப்பட்ட அல்லது எவராலோ திட்டமிடப்பட்டு தூண்டப்பட்ட வன்முறை இன்னும் எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலம் உதவிக்காக அழுதுக் கொண்டிருக்கிறது. யார் இதை கவனிப்பது? முன்னுரிமை அடிப்படையில் இந்த பிரச்சனையை சரி செய்வது நமது கடமை.

 

செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி (apcnewstamil.com)

தேர்தல் என்பது ஒரு மித்த கருத்தை உருவாக்கும் செயல்முறை. இது ஒரு போட்டிதான், போர் அல்ல. எனவே தேர்தல் கொண்டாட்டங்களில் இருந்து வெளியே வந்து நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

எதிர் கட்சிகளை எதிரியாக பார்க்க கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச்சத்திற்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறி இருக்கிறது. அதன் விளைவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றம் தான் ஜனநாயகத்தின் சாராம்சம். இது மோகன் பகவத் பேசியவை.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் தெருக்களில் பேசப்படும் ஏழை எளியவர்களின் குரல்களை காது கொடுத்து கேட்பதில்லை. மோடியின் புகழ் வெளிச்சத்தில் மயங்கி கிடக்கிறார்கள். அவர்கள் எதார்த்த நிலையை உணராமல் வானத்திற்கும் பூமிக்கும் தாவி தாவி குதித்தார்கள். ஆனால் உத்தரப்பிரதேச மக்கள் எதார்த்த நிலையை புரிய வைத்துவிட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சனத்திற்கு பாஜகவில் இருந்து ஒருவரும் பதிலளிக்கவில்லை. ஆனால் பிரச்சினை நெருப்பு மீது படிந்திருக்கும் சாம்பல் போல் கணன்றுக் கொண்டு இருக்கிறது.

MUST READ