இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது சரியானது என்றும், அதேவேளையில் அதிமுகவுக்கான வாக்கு சதவீதம் 30 ஆகவே இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- கடந்த 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில், திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு சொல்லியது. தற்போதும் திமுக கூட்டணியை வெல்லும் என்று சொல்லியுள்ளது. திமுக அணியின் வாக்கு சதவீதம் என்பது 45 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகளை கொண்டிருக்கிறது. இந்த வாக்குகளை 3வது முறையாக ஸ்டாலினுக்கு போட்டிருக்கிறார்கள். திமுக கருத்துக்கணிப்பில் 47 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர். இந்தியா டுடே – சீ ஓட்டர்ஸ் திமுக கூட்டணிக்கு 35 இடங்களுக்கு மேல் வரும் என்று ஏற்கனவே சொன்னதுதான். நானும் அதையே தான் சொன்னேன். இதை மாநிலத் தேர்தலை மையப்படுத்தி பார்க்க வேண்டும். இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் பாஜகவுக்கு 324 இடங்களும், பாஜகவுக்கு 260 இடங்களும் கிடைக்கும் என்று சொல்லியுள்ளனர். அதேவேளையில் தமிழ்நாட்டில் திமுக 35 இடங்களுக்கு மேலாக வரும் என்று சொல்லியுள்ளது.
ஸ்டாலின் குறித்த இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கிட்டத்தட்ட சரியாகவே உள்ளது. திமுக ஆதரவாளர்களால் மத்தியில் உள்ள கருத்துக்கணிப்பு தவறு, தமிழ்நாட்டில் மட்டும் சரி என்று சொல்ல முடியாது. இந்த கருத்துக்கணிப்பு ஒன்றும் தேர்தல் முடிவு அல்ல. கடந்த 3 தேர்தல்களின் முடிவை எதிரொலிக்கிறது. சி- ஓட்டர் கருத்துக் கணிப்பில் மற்ற கட்சிகளுக்கு 13 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. அதில் பெரும்பாலும் விஜய்க்கு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். விஜய் இன்னும் ஒரு சில கூட்டங்களில் பேசினார் என்றால் அவர் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள். சிவாஜி போன்றவர்தான் விஜய். மாநாட்டிற்கு வந்த கூட்டம் என்பது விஜயை பார்க்க வந்த கூட்டம்தான் என்று தெரிந்துகொள்வார்கள். மதுரை மாநாட்டில் கூட்டம் கலைந்துசென்ற போதே விஜயின் பலம் தெரிந்துவிட்டது. இன்னும் 2 கூட்டங்களை அவர் நடத்தி, கூட்டம் கலைந்துவிட்டது என்றால் அவரும் சிவாஜி, சரத்குமார் போன்றவர் தான். அவருக்கு வாக்குகள் வராது என்று தெரிந்துவிடும்.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய், அதிமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளனர். விஜய், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார் என்றால், அவரால் பாதிக்கப்பட போவது அதிமுகதான். அதிமுகவின் 20 சதவீத வாக்குகளில் குறிப்பிட்ட அளவு இரட்டை இலைக்கான வாக்குகளாக இருக்கும். மற்றொரு திரைப்பட கலைஞர் வருகிறபோது பாமர மக்களின் வாக்குகள் கொஞ்சம் விஜய்க்கு மாறிபோகும். எடப்பாடி பழனிசாமிக்கு, வாக்காளர்களை ஈர்க்கும் திறன் இல்லாததால்தான், சீமான் அதிமுகவின் வாக்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலை பாதிப்பு அடைய செய்தார். மு.க.ஸ்டாலின், வாக்குகளை அதிகரித்துள்ளார். அப்போது விஜயும், தகுதியான தலைவராக போட்டியிட்டால் பிள்ளை வேளாளர் சமுதாய வாக்குகள் கிடைக்கும். எடப்படி அதிமுகவுக்கு விழுந்த பிராமணர் வாக்குகள் கமல்ஹாசனுக்கு கிடைத்ததோ, அதேபோல் அதிமுவுக்கு விழுந்த பிள்ளை வேளாளர் சமுதாய வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும். அதேபோல், பெரியார் விவகாரத்தில் சீமான் விஜயை தாக்கி பேசியதால், மொழிச் சிறுபான்மையினர் வாக்குகளும் விஜய்க்கு கிடைக்கலாம்.
நான் ஆபத்தாக பார்ப்பது விஜய் மாநாட்டில் கூட்டம் கலைந்து சென்றிருக்க கூடாது. விஜயை ஒரு தலைவராக அவர்கள் பாத்திருந்திருந்தால் பேசி முடிக்கும் வரை நின்று இருப்பார்கள். விஜய், மாநாடு உடன் விஜயகாந்தின் மாநாட்டை பார்த்தோம் என்றால் அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் இருந்தது. அப்போது அவர் எப்படிபட்ட தலைவர் என்பதை 2026 தேர்தல் தான் முடிவு செய்யும். சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பதில் திமுக கூட்டணி தொடர்பான கணிப்புகள் சரியாகவே உள்ளது. அடுத்தபடியாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு 37 சதவீதம் வாக்கள் கொடுத்திருக்கிறார்கள். 37 சதவீதம் என்பது மோடிக்கானது. எடப்பாடி பழனிசாமி என்று வரும்போது 7 சதவீதம் போய்விடும். 30 சதவீதம் வாக்குகள் தான் வரும். அதிமுகவால் பலன் பெறாத சமுதாயங்கள் அவருக்கு வாக்களிக்காது. இவற்றை குறிவைத்துதான் சீமான் வேலை செய்து வருகிறார். அத்துடன் ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடாததும் சேர்ந்து சீமானுக்கு பெரிய அளவில் வாக்குகளை கொண்டுவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.