தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் அந்த பணியில் சேர்ந்து இந்த மே மாதத்துடன் 20 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார்.
கூகுள் நிறுவனம் உலக அளவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகின்ற முக்கிய நிறுவனங்களில் ஒன்று. ஒட்டுமொத்த உலகத்தையும் தன் கையில் வைத்திருக்கும் அளவிற்கு கூகுளின் ஆதிக்கம் வளர்திருக்கிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தான் சுந்தர் பிச்சை. அவர் 20 போன்களை பயன்படுத்தி வருகிறார். கூகுளில் உள்ள பல்வேறு செயலிகள் சரியாக இயங்குகிறதா? அதில் உள்ள குறைகளை கண்டுப் பிடிக்கவும், கண்காணிக்கவும் அவர் 20 போன்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் அவருடைய செல்போன்களை பராமரித்து வருகிறார்.
சுந்தர் பிச்சையின் சம்பளம்
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் சம்பளம் சாதாரணமாகவா இருக்கும்? நாம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு அவர் சம்பளம் பெறுகிறார். சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் மட்டும் ரூ. 5 கோடிக்கு மேல் பெறுகிறார். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 66 ஆயிரத்து 666 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருடைய வளர்ச்சியின் உயரத்தை நினைத்தால் ஆச்சரியப்பட வைக்கிறது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திடம் இருந்து அவர் காம்பன்ஷேசன் தொகை 1,854 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
தற்போது 51 வயது நிறைவடைந்துள்ள சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. அவர் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கரக்பூர் ஐஐடி – யில் சேர்ந்து கல்லூரி படிப்பையும், அமெரிக்காவில் மேற்படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட சுந்தர் பிச்சை, வாழ்க்கையில் பல சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தார்.
இளமை பருவத்தில் அதிகம் புத்தகம் வாசிக்கின்ற பழக்கம் கொண்ட சுந்தர் பிச்சை, மாபெரும் சிந்தனைவாதி பெர்னாட்ஷாவின் நூல்களை படிப்பார்.
பெர்னாட்ஷா எழுதிய ஒரு வாசகம் – “நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைந்து விடுவேன். எனக்கு தோல்வி அடைவதை பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றிப்பெற என்ன செய்யவேண்டும் என சிந்தித்த போது எனக்கு ஒரு உண்மை பளிச்சென்று விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றிப்பெற முடியும் என்பதை அறிந்துக் கொண்டேன். ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்” என்ற வரிகள் மிகவும் பிடித்தமானவை என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
பல சோதனைகளுக்கு பின்னர் 2004ல் மே மாதம் கூகுல் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2009ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது கூகுள் குரோம் உருவாக்கியதில் சுந்தர் பிச்சை பெரும் பங்காற்றினார். அதன் பின்னர் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்.
சுந்தர் பிச்சை ஒரு நாள் ஒன்றுக்கு ரூ 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை சிந்திப்போம்.