Homeசெய்திகள்கட்டுரைகராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. போரை பயன்படுத்தி பல தடைச்சட்டங்கள் கொண்டுவரப்படும். 1971ல் வங்கதேச யுத்தம் நடைபெற்றது. பாகிஸ்தான் ஒரே நாடாகவும்  பிரிவுகளாகவும் உள்ளது. அது சரித்திரத்தின் விபரீதமாகும். கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், நடுவில் இந்தியா. இப்படியாக பிரிவினை அமைந்திருந்தது. பாகிஸ்தானில் உருது கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். வங்க மொழியை அழுத்தினார்கள். அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி லீக் வெற்றி பெற்றது. ஆனால் பதவி ஏற்பதற்கு மேற்கு பாகிஸ்தான் அவர்களை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு து ராணுவத்தை அனுப்பி, அடக்க முயற்சிக்கிறார்கள்.  அதன்காரணமாக 70களில் இருந்து பிரச்சினை ஏற்பட்டது. கிழக்கு பாகிஸ்தானில் பெரிய புயல் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் மேற்கு பாகிஸ்தான் உரிய நிதியுதவி வழங்கவில்லை. அதில் லட்சக்கணக்கானோர் இறந்துவிட்டனர். அதில் தப்பி அகதிகளாக வந்தவர்களால் மேற்குவங்க மாநிலத்தில் தீவிரவாதம் பெருகியது. ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் முக்தி வாகினி என்கிற வங்கதேச விடுதலைப்படை சுதந்திரத்திற்காக போராடியது. இந்த போரில் இந்திரா காந்தி தலையிட்டு, பெரிய வெற்றி பெற்றது.

இந்த போரில் 90 ஆயிரம் பாகிஸ்தானிய வீரர்களை விடுதலை செய்திருக்கக்கூடாது என்று விமர்சனம் எழுந்தது. அதற்கு பிறகு பல வருடங்களாக அமைதிதான் நிலவியது. அடுத்து பெரிய யுத்தம் கார்கில் வார். அதை யுத்தமாக 2 நாடுகளும் அறிவிக்க வில்லை. நிழல் யுத்தம்தான். மரபு சார்ந்த யுத்தங்கள் மிகவும் செலவு பிடிப்பதாகும். ஒருநாள் நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் டிரோன் தாக்குதல், அதற்கான எதிர் தாக்குதல் என்பது ஒரு 20 நிமிடங்கள் சண்டை போடுவதற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அப்போது, யுத்தம் நீடிக்க நீடிக்க இரு தரப்புக்கும் செலவு அதிகமாகி விடும். பாகிஸ்தான் சிறிய நாடு என்பதால் அதன் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். இவை தவிர்த்து தண்ணீர் பிரச்சினை. ஜம்மு காஷ்மீரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதனால் சிந்து நதியில் நம்மால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. அதிலே திறந்துவிடுகிறோம். என்னதான் சிந்து ஒப்பந்தத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொன்னாலும்,  அது இயற்கையின் கைகளில் உள்ளது. சமவெளி பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறபோது, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வார்கள்.

போர் முடிந்துவிடும்... ஆனால் அந்த தாய் .... நடிகை ஆண்ட்ரியாவின் பதிவு வைரல்!

இந்தியா என்கிற துணைக்கண்டத்தை ஆர்ட்டிபிசியலாகத்தான் பிரித்துள்ளோம். பரந்து விரிந்த பஞ்சாப் மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ளோம். பகவல்பூரில் தாக்குதல் நடக்கிறது என்றால், அமிர்தசரசிலும் தாக்குதல் நடக்கிறது. ஆனால் டிரோன்களின் எல்லை என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கும் அப்பால் உள்ளது. டிரோன் தடுப்பு நவடடிக்கைகள் மூலம் தாக்கி அழித்துவிடுகிறார்கள். அப்போது  டிரோன்களின்  உடைந்த பாகங்கள் எங்கே விழுகிறபோது இரு நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள். போர் என்பது சரிதான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது. போரை தொடங்குவது எளிதாகவும், போரை நிறுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் போரை நிறுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டுதான் போரை நிறுத்த வேண்டும். இவ்வாறுதான் உலக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு ...

தற்போதைய போரில் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் போன்ற பகுதிகளை இந்தியா கைப்பற்றி விட்டதாக வலதுசாரிகள் சொல்கிறார்கள். அப்படி பாகிஸ்தான் நகரங்களை நாம் கைப்பற்றுவது என்பது சாத்தியமான விஷயம்தான். 1965ஆம் ஆண்டு யுத்தத்தின்போது லாகூர், கராச்சி எல்லாம் அடிவாங்கிவிட்டது. பல பகுதிகளை நாம் கைப்பற்றிவிட்டோம். அமைதி ஒப்பந்தம் வருகிறபோது நாம் எல்லாவற்றையும் திருப்பி கொடுத்துவிட்டோம். வங்கதேச யுத்தத்தின்போதும், கைப்பற்றிய பகுதிகளை திருப்பி கொடுத்தோம். அதேவேளையில் உக்ரைனிடம் கைப்பற்றிய பகுதிகளை திருப்பி கொடுக்க ரஷ்யா மறுக்கிறது. முன்பு போர் நடக்கிறபோது நாடுகளை பிடிப்பது நோக்கமாக இருந்தது. 2ஆம் உலகப்போருக்கு பின்னர் அப்படி ஒரு நிலைமை கிடையாது. தற்போது மீண்டும் அத்தகைய போக்கு வந்துள்ளது. இந்த இடம் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை எப்படி கடக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

cm

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு 1971 காலகட்டத்தில் வங்கதேச போரின்போது கலைஞர் ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். ஊர்வலம் சென்றுள்ளார். போர் விவகாரங்களில் தமிழ்நாடு எபோதும் முன்னிலையில் இருக்கும். வடமாநிலங்களில் இருக்கும் ராணுவ உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை என்று நினைக்கிறோம். அதன் காரணமாகத்தான் இந்த பேரணி. 1971ல் இந்திரா காந்தியுடன் கலைஞர் கூட்டணியில் இருந்தார். அதனால் போர் நடவடிக்கைகளுக்கு  ஆதரவு தெரிவித்தார். நவீன போர் யுகத்தில் வெறுமனே சண்டை நடப்பது வடஇந்தியாவில் மட்டும் தான் என்று நினைக்க முடியாது. பழைய போர்களுக்கும், இந்த போருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால்? இது ஹைலி டெக்னிக்கல், வெரி மாடர்ன். நவீன போர் யுகத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பழைய போர்களுக்கும், இந்த போருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முனைகளில் தாக்குதல் நடைபெற வாப்பு உள்ளது. அதனால்தான் இந்திய ராணுவம் ஒரே நேரத்தில் பாகிஸ்தானின் பல இடங்களில் தாக்கியுள்ளனர்.

பாகிஸ்தானையே அழிக்க வேண்டும் என்கிற ஒரு சித்தாந்தத்தை நோக்கி வடஇந்தியா செல்கிறது. அது நல்லதா? கெட்டதா? என தற்போதைக்கு சொல்ல முடியாது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த உணர்வு காலங்காலமாக உள்ளது. ஏன் என்றால் நாட்டு பிரிவினையில் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். இன்று வரை அந்த நிலைமை இருப்பதை நான் செய்திகளில் பார்க்கிறேன். இதை 2 மதங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாறி, இதை அரசியலாக்கி விடுவார்களோ என்கிற அச்சம் உள்ளது. இங்கே பாஜக அரசியலாக்குகிறது. பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசியல்வாதிகள் அரசியலாக்குகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ