spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉச்ச கட்டத்திற்கு வந்த திமுக - காங்., கூட்டணி விவகாரம்! வேறு திசையில் பயணிக்கிறார்கள்... காரணம்...

உச்ச கட்டத்திற்கு வந்த திமுக – காங்., கூட்டணி விவகாரம்! வேறு திசையில் பயணிக்கிறார்கள்… காரணம் யார் தெரியுமா? ஜென்ராம் நேர்காணல்!

-

- Advertisement -

திமுகவுக்கு மாற்றாக மூன்று அணிகளில் யாரை தேர்வு செய்தாலும், மறைமுகமாக பாஜகவின் ஆட்சி நடைபெறுவதாக தான் அர்த்தம். எனவே திமுக கூட்டணியில் இருந்தால் மட்டும் தான் காங்கிரசுக்கு மரியாதை என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.

genram
genram

திமுக – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்திருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அதேநேரம் காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை கைவிட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கள். காங்கிரசை பொறுத்தவரை 2004 முதல் திமுக கூட்டணியில் உள்ளது. இடையில் ஒரு தேர்தல் மட்டும் வெளியே சென்றது. அவர்களுக்கு இப்படியான ஒரு தேவை இருந்தால், அதை திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துகிற போது அதனை பேசி இருக்கலாம். ஆனால் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் விளம்பரத்திற்காக அல்லது ஊடக வெளிச்சத்தை பெறுவதற்காக கையாளுகிற முறையை காங்கிரசும் கையாள்கிறது.

we-r-hiring

அதேநேரம் காங்கிரஸ் முழுமையான பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவர்களுடைய கோரிக்கையை திமுக பரிசீலிக்கும். உரிய தீர்வை வழங்கும். இருவரும் இணைந்து பழையபடி கூட்டணியில் செல்வார்கள் என்றே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கோரிக்கையை, தங்களின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசி அதை ஏற்க வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் எக்ஸ் தளத்தில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தால், அதே வித்தையை திமுகவும் கையாண்டால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

2004 முதல் தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் திமுக உடன் இணைந்து தான் எதிர்கொள்கிறது, ஒரு தேர்தலை தவிர. இவ்வளவு நெருக்கமாக இருக்கும்போது ஆட்சியில் பங்கு என்கிற விவகாரத்தை இப்படிதான் கையாள வேண்டுமா? காங்கிரசின் விமர்சனங்களுக்கு மிகவும் தாமதமாக தான் திமுக திமுக அமைச்சர்கள் எதிர்வினை ஆற்ற தொடங்கியுள்ளனர். இதுவரை நான் காங்கிரசில் உள்ளவர்களின் கருத்து வேறுபாடாக மட்டுமே பார்த்து வந்தேன்.

ஆனால் இந்தியா டுடே கான்கிலேவில், தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பிறகு, கூட்டணி ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் ஆட்சியில் பங்கு கோராமல் போனது காங்கிரஸ் செய்த தவறு என்று எதிரிக்கு எதிர்வினை ஆற்றுவது போன்று, வேகமாக மாணிக்கம் தாகூர் எதிர்வினை ஆற்றுகிறபோது தான் அவர்கள் வேறு திசையில் செல்வதற்கான தொடக்கமாக இதை நடத்துகிறார்களோ என்று தோன்றுகிறது.

மாணிக்கம் தாகூர் மேற்கோள் காட்டுவது போல 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் நினைத்து இருந்தாலும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோரி இருக்க முடியாது. காரணம் பாமக, இடதுசாரிகள் ஆட்சி அதிகாரததில் பங்கு கோராமல் தான், திமுக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அதுவே ஆட்சி நடத்துவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் ஆட்சிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. காங்கிரஸ் ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் திமுக ஆட்சிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. எனவே காங்கிரசின் பெருந்தன்மை காரணமாக தான் திமுகவின் 5 ஆண்டு ஆட்சி நடைபெற்றது என்று சொல்வதும், ஆட்சியில் பங்கு ஏன் கேட்கவில்லை என்று சோனியா காந்தியை குற்றம்சாட்டுவது என்பதும், அர்த்தமற்றது. அல்லது அரைகுறை உண்மையாகும்.

அந்த அறைகுறை உண்மையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு அவர்களுடைய கருத்துரிமையும் பேச்சுரிமையும் மாறுபடுகிற உரிமையும் கட்சிக்குள் கொடிகட்டி பறக்கிறது என்றுதான் புரிந்துகொள்கிறோம்.

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு - விஜய் ஆவேசம்

கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை திமுக, அதிமுக தலைமை ஒதுக்குகிற போது, அவர்கள் கூட்டணியை பலவீனமாக வைத்திருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். தனிக்கட்சி ஆட்சிதான் என்று மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். திமுக அதை நேர்மையுடன் செய்கிறது. அதிமுக அந்த விவகாரத்தில் நேர்மை அற்ற தன்மையுடன் செய்கிறது. காங்கிரசை பொருத்தவரை அவர்களுக்கு விஜயுடன் செல்லும் வாய்ப்புகள் தான் உள்ளன. அவர்கள் தனித்துப் போட்டியிடும்போது என்ன வாக்குகள் கிடைக்குமோ, அதுதான் விஜயுடன் சேரும்போதும் கிடைக்கும்.

ஆனால் விஜயுடன் அதிக தொகுதிகளில் போட்டியிடும்போது, கிடைக்கிற வாக்கு சதவீதத்தை வைத்து எதிர்வரும் தேர்தல்களில் எல்லோருடனும் பேச முடியும். தற்போது ஒரே கூட்டணியில் இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பாஜக ஒவ்வொரு மாநிலமாக தங்களுடைய அதிகாரத்தை விரிவு செய்து வரும்போது தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு சூழல் ஏற்படக்கூடாது என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் கூட்டணியில் உறுதியாக இருக்க வேண்டியவர்கள் காங்கிரஸ்தான்.

மோடி - அமித்ஷா

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை வீழ்த்துகிற அணியில் திமுக தான் முன்னிலையில் உள்ளது. திமுக தவிர்த்து வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் பாஜகவினுடைய தலையீடுகள் ஓங்கும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக ஆட்சி நடைபெறும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். எஞ்சி இருப்பது தமிழ்நாடும், கேரளா தான். அதனால் இங்கே கால்பதிக்க வேண்டும் அவர்கள் அனைத்துவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று முனைகளில் அவர்கள் தான் போராட்டங்களை நடத்துகிறார்கள்.

ஒவ்வொரு வியூகங்கள் அடிப்படையில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே திமுகவுக்கு மாற்றாக மூன்று அணிகளில் யாரை தேர்வு செய்தாலும், மறைமுகமாக பாஜகவின் செல்வாக்கு அதற்குள்ளாக இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடியும். அப்படிதான் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக  திமுக கூட்டணியில் இருந்தால் மட்டும் தான் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை.

தேசிய அளவிலும் காங்கிரசை முதன்மைபடுத்துகிற வேலையை மற்ற எல்லா மாநிலங்களை விட தீவிரமாக செய்வது தமிழ்நாட்டை சேர்ந்த திமுக தான். இதை எல்லாம் புரியாதவர்களாக ராகுல், பிரியாங்கா, கார்கே இருப்பார்கள் என்று தோன்றவில்லை. எனவே அவர்கள் தங்களுடைய கட்சியினரை கட்டுப்படுத்தாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பீகாரில் தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று ஒரு சண்டித்தனம் செய்ததால் பாதிப்பில் போய் முடிந்தது. அது யாருக்கு சாதமாக போய் முடிகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால் உணரவில்லை. இதுபோன்று காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரச்சினைகள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ