spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!

ஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் சம்பவத்தில் விஜய் உள்நோக்கத்தோடு கூட்டத்தை கூட்டியதாகவும்,  அதில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு அடிப்படை வேண்டும். மாநில அரசின் காவல்துறை ஒரு வழக்கின் விசாரணையை முறையாக நடத்தவில்லை என்பதை நீதிமன்றம் உணர்கிற பட்சத்தில் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைக்கப்பட்டது.

நீதிபதி தண்டபாணி தலைமையிலான அமர்வு, விசாரணை தற்போது தான் தொடங்கி இருக்கும் நிலையில், அதனை சிபிஐக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டனர். ஆனால் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்வது. உச்ச நீதிமன்றம் நாட்டு குடிமக்களுக்கு பாரபட்சமற்ற, நியாயமான, பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உரிமை உள்ளது என்று சொல்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியோ, அல்லது தமிழக அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமோ எதையாவது தவறாக விசாரித்தனரா? என்கிற புகார் உள்ளதா? அப்போது அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கான நோக்கம் என்ன?

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

கரூர் சம்பவம்  குறித்து காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் எப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. அந்த எப்.ஐ.ஆர் எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதில் முன்னுக்கு பின் முரணான தகவல் இடம் பெற்றிருந்தாலோ , அல்லது சேர்க்கப் படாமல் இருந்தாலோ அப்போது நீதிமன்றத்தை அணுகலாம். அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் சரியாக இருக்கும். ஆனால் எதுவும் இல்லாமல் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறோம். வழக்கை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜர் ரஸ்தோகி தலைமையில் குழு அமைத்துள்ளார்கள். அப்போது இதில் நீதியின் கண்ணோட்டம் எங்கே உள்ளது? இரு நீதிபதிகளின் பார்வை நீதியின்பாற்பட்டதாக இல்லை. இவர்கள் விசாரித்து பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அடிப்படை அற்றது.

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, விஜய் நீதி வென்றுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அப்படி என்றால் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துள்ளது என்று அர்த்தம். இனி தமிழ்நாடு காவல்துறை யாரையும் கைது செய்ய முடியாது என்று அர்த்தம். அப்படி கைது செய்திருந்தால் விடுதலை செய்துவிட வேண்டும் என்று அர்த்தம். புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருக்க வேண்டாம்.ஆதவ் அர்ஜுனா வேறு மாநிலத்திற்கு ஓட வேண்டாம் என்று சொல்கிறார்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சரி எல்லாவற்றையும் முடித்து இந்த வழக்கை சிபிஐ வசம் கொடுத்தாகிவிட்டது. அப்போது சிபிஐயிடம் இருந்து உங்களுக்கு நியாயம் கிடைக்குமா? விஜய் அவர்களே நீங்கள் இப்போதுதான் சிக்கி இருக்கிறீர்கள். சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அவர் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது முதலில் விசாரணை நடத்தி கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை எல்லாம் திரட்டி விடுவார்கள். பின்னர் உங்களையே பிக்ஸ் செய்து மேலே இழுத்துவிடுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று முகத்தை மூடிக்கொண்டு வந்தது போல நீங்களும் ஒரு டிராமாவுக்கு நீங்கள் தயாராக இருங்கள். அப்படி உங்களையும் டெல்லிக்கு கூப்பிடுவார்கள். நீங்கள் அங்கே செல்கிறபோது உங்களுக்கு 25 சீட்டுகள். அதனால் நீங்கள் நீதிவெல்லும் என்று சொல்லாதீர்கள். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த உடன் வழக்கை தூங்க போட்டுவிடுவார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, இந்த சம்பவத்திற்கு ஒரே ஒரு காவல் ஆய்வாளர் தான் காரணம் என்று குற்றப் பத்திரிகையில் சொன்னார்கள். ஆனால் குற்றப்பத்திரியை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. எனவே உங்களையும் சிக்க வைக்கலாம். வழக்கை ஆறப் போட்டு கரூரில் செத்துபோன 41 பேருக்கு நீதி கிடைக்காமலும் போகலாம்.

உச்சநீதிமன்றம், ஓய்பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக்குழு என்பதை எல்லாம் பார்த்து மயங்காதீர்கள். முதல் ஆபத்து உங்களுக்கு. இரண்டாவது ஆபத்து உண்மைக்கு. சிபிஐ உண்மைக்கு புறம்பாக ஏதேனும் சொன்னால், தமிழக காவல் துறை தங்களிடம் உள்ள ஆவணங்களை காண்பித்து உடைத்து விடுவார்கள். தாங்கள் கொடுத்த ஆவணங்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்பார்கள். எனவே விஜய் நினைப்பது போலவோ, ஆதர் அர்ஜுனா சந்தோஷப்படுவது போலவோ, உங்களுடைய ஆட்கள் பதிவுகள் போடுவது போல உங்களுக்கு ஹாப்பியர் டைம்ஸ் எல்லாம் வரவில்லை.

நீங்கள் ஒரு உள்நோக்கத்தோடு அங்கே கூட்டத்தை கூட்டினீர்கள். நீங்கள் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. இதை 2 நாள் விசாரணையில் சிபிஐ கண்டுபிடித்து விடுவார்கள். எனவே எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இந்த விவகாரத்தில் எவ்வளவு தூரம் உண்மையை வெளிக்கொண்டு வர முடியுமோ, அதை ஊடகங்களும், இங்கிருக்கும் பத்திரிகையாளர்களும் கொண்டுவந்து விட்டோம்.

tamilnadu assembly

ஒன்றே ஒன்றுதான் நீங்கள் ஷுட்டிங் எடுத்திருக்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களை கைப்பற்றப்போகும் நிலையில் தான், உங்களை காப்பாற்றுவது போல காப்பாற்றி அவர்கள் உங்களை கையில் எடுத்துள்ளார்கள். இல்லாவிட்டால் இந்நேரம் பேருந்து பறிமுதல் ஆகி இருக்கும். எல்லோரையும் கைது செய்திருப்பார்கள். விசாரணையில் எதற்காக கூட்டம் கூட்டினார்கள். கூடுதலாக வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும்.

விஜய் ஒவ்வொரு ஊராக வந்து பேசுகிறார். அப்போது எதற்காக கோவை, சேலம், ஈரோட்டில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். ஏன் வந்தார்கள் என்று சொல்லுங்கள். எல்லாவற்றுக்குமான பதில் அங்கே இருக்கிறது. அதை எல்லாம் எடுத்தாகிவிட்டது. எனவே விஜய் தன்னை காப்பாற்றிக் கொள்வதாக நினைத்து நீதி வெல்லும் என்று சொல்கிறீர்கள். நீதி வென்றால்? நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் விஜய், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ