spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபிரேமலதாவுக்கு விபூதி! விந்தியாவுக்கு எம்.பி. பதவி! நயினாரை சந்திக்கும் அன்புமணி!

பிரேமலதாவுக்கு விபூதி! விந்தியாவுக்கு எம்.பி. பதவி! நயினாரை சந்திக்கும் அன்புமணி!

-

- Advertisement -

வாக்கு வங்கி இல்லாத தேமுதிகவை தூக்கி சுமப்பதற்கு எடப்பாடி பழனிசாமி விரும்ப மாட்டார். 2 ராஜ்யசபா சீட்டுகளையும் அவர் தன்னுடைய கட்சியினருக்கே வழங்கிட  வாய்ப்புகள் உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்

we-r-hiring

மநிலங்களவை தேர்தலில் அதிமுகவின் 2 சீட்டுகளில், ஒன்று கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுமா? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக ஒரு மாநிலங்களவை சீட்டை தேமுதிமுகவுக்கு கொடுத்து, அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக தற்போது வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரே நேரத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடக்கூடிய ஆற்றல் பிரேம லதாவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு வாக்கு வங்கி என்பது பின்னடைவை நோக்கி போய்விட்டது. கடந்த தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை தான் பெற்றனர். அவர்களை தூக்கி சுமப்பதால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. அரசியலில் யாரும், யாரையும் வேஸ்ட் லக்கேஜ் ஆக தூக்கி சுமக்க விரும்ப மாட்டார்கள். தற்போது அவர்கள் பாஜகவை தூக்கி சுமக்கிறார்கள் என்றால் இ.டி, ஐ.டி., போன்ற விசாரணை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும். தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அதிமுக – பாஜக கூட்டணி என்பது ஒரு பொருந்தாக்கூட்டணி ஆகும். இரட்டை இலையை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் சேர்ந்த கூட்டணி ஆகும். ஆனால் தேமுதிக போன்ற ஒரு தேவை இல்லாத லக்கேஜை தூக்கி சுமக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

விஜயகாந்த் மிகப் பெரிய மனிதர். திரைக்கலைஞர்களுக்கு சாப்பாடு போட்டார். வாய்ப்பு வழங்கினார். ஆனால் அவருக்கு அரசியலில் கொள்கை, சித்தாந்தம் என்று எதாவது உள்ளதா? தற்போது எதற்காக கூட்டணி வைக்கிறீர்கள் என்று கேட்டால்? திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறார்கள். திமுகவை எதற்கு வீழ்த்த வேண்டும் என்கிற காரணம் வேண்டும் அல்லவா? அதற்கான காரணத்தை சொல்லி, இதைவிட சிறந்த ஆட்சியை நான் நடத்துவேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் எதுவுமே சொல்லாமல் திமுகவை வீழ்த்த வேண்டும்… திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதுபோல எந்தவித கோட்பாடுகளும் இல்லாமல் தேமுதிக என்கிற கட்சியை நடத்துகிறார்கள். மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாக ஒரு கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதன் வாயிலாக எந்த ஒரு நம்பகத்தன்மையையும் உருவாக்காமல் எனக்கு நேரடியாக ராஜ்யசபா கொடுங்கள் என்று கேட்கிறார் பிரேமலதா.

கம்யூனிஸ்ட், திமுக போன்ற மற்ற கட்சிகளில் எல்லாம், கட்சிக்கு யார் அதிகம் தியாகம் செய்தார்கள் என்கிற போட்டி இருக்கும். ஆனால் அதிமுகவில் கட்சிக்கு யார் துரோகம் செய்தார்கள் என்கிற போட்டி தான் இருக்கும். அதிமுகவில் எந்த தலைவரை பேட்டி எடுத்தாலும் யார் துரோகி என்கிற போட்டி நடந்துகொண்டே இருக்கிறது அல்லவா? இபிஎஸ் பெரிய துரோகியா, ஓபிஎஸ் பெரிய துரோகியா, டிடிவி தினகரன் துரோகியா?, சசிகலா துரோகியா? யார், யாருக்கு துரோகி என்கிற ஒரு போட்டி நடக்கிறது. தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவையே காலி பண்ணுகிற எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை மட்டும் விட்டு வைப்பாரா? என்கிற கேள்வி உள்ளது. அவர் வரத்தை கொடுத்தான் சிவனே தவிச்சான் என்றவாறு யார் தலையில் கையை வைத்தாலும் அழிந்துபோகணும் என்பது போல அவர் ஆசிர்வாதம் என்பது அழிவு சக்தியாகத்தான் இருக்கும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தேமுதிக இன்னும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுகவில் விந்தியாவுக்கு எம்.பி சீட் கொடுக்க வேண்டும் என்று பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது. இந்த முறை பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக விந்தியாவுக்கே சீட் கொடுத்துவிடலாம் என்று அதிமுக நினைக்கிறது. அவர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்வார் என்று நினைக்கிறார்கள். தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம் எல்லாம். ராஜன் செல்லப்பா மகனுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். கட்சிக்காரர்களை தக்க வைக்கவே எடப்பாடி பழனிசாமி போராடிக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு சீட் தருவது சாத்தியமில்லை.

பாமகவை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது. அந்த வேளையை பாஜக அன்பாகவும், பாசமாகவும் மிரட்டி அவர்களை பணிய வைத்து விடுவார்கள். சிபிஐ விசாரணை வரும் என்றால் பாமக தானாக அமித்ஷாவை தேடி வந்து கூட்டணி அமைத்துவிடுவார்கள். பெரிய மாநில கட்சியை நடத்துகிற எடப்பாடி பழனிசாமியே, அமித்ஷாவை பார்க்க டெல்லிக்கு நேரில் செல்கிறபோது, சிபிஐ வழக்கு இருக்கிற அன்புமணிக்கு அமித்ஷாவை சந்திக்க விருப்பம் இருக்காதா என்ன?

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக அதிமுகவின் ஒத்துழைப்பின் பேரில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டதாகவும், அதற்கு அதிமுகவில் எதிர்ப்பு இருந்தபோதும் அண்ணாமலை வரட்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அண்ணாமலையின் அறிவாற்றல் பாஜகவுக்கு தெரியவில்லை. கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர். ஒரு நல்ல சாதியில் பிறந்திருக்கிறார் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஒரு மனிதரை படிப்பு அறிவின் அடிப்படையில் பார்க்காமல் சாதியின் அடிப்படையில் பார்க்கிற நல்ல புத்தி தலைவர்கள் மத்தியில் உள்ளது. அண்ணாமலைக்கு வேறு வழியில்லை. பாஜக அரசியலில் எதற்கும் வழியில்லை என்றால் ஆளுநராக அனுப்பி வைப்பார்கள். அண்ணாமலை இளைஞராக உள்ளார். அதனால் ராஜ்சபா ஆக்குகிறார்கள். சிறந்த தேசப்பக்தரான அவரை மணிப்பூர் போன்ற மாநிலத்தில் கலவரத்தை அடக்குவார். அல்லது பகல்காம் போன்று பாதுகாப்பு இல்லாத இடங்களில் போட்டால், அவர்களை பாதுகாத்து வைப்பார். அவரது திறமையை பாஜக வீணடித்து விடக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ