2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தோல்வி அடைந்தாலும் 2027ஆம் ஆண்டு விஜயின் அடுத்த படம் வெளியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமி, விஜய் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். அப்படி விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்கிறார் என்றால் முதலமைச்சர் யார் என்கிற கேள்வி எழும். விஜயின் இலக்கு என்பது முதலமைச்சர் ஆவது தான். அப்போது எடப்பாடி பழனிசாமி என்னவாக இருப்பார்? கரூர் துயர சம்பவத்தை அடுத்து தவெக சார்பில் தீபாவளி கொணடாட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை யார் விட்டார்கள். அதில் விஜயின் கையெழுத்து உள்ளதா? என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. இது குறித்து விஜயிடமும் கேட்கவும் முடியாது.
விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார். அவர்களுக்கு என்டிஏ கூட்டணி என்றாலே என்னவென்று தெரியாது. பாஜக கட்சி குறித்தோ, அதனுடைய கொள்கைகள் குறித்தோ விஜய்க்கு எதுவும் தெரியாது. என்டிஏ கூட்டணி என்று சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவார்கள். திடீரென அதனை ஆப் செய்துவிட்டு ஓடி விடுவார்கள். போலீசார் தேடுகிறது என்றால் தலைவன் முதல் தொண்டன வரை இன்ஸ்டாகிராமை ஆப் செய்துவிட்டு ஓடி விடுவார்கள்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. அதேவேளையில் சிபிஐ விசாரித்த எந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று தரவுகள் சொல்கின்றன. சிபிஐ விசாரணைக்கு சாதகமாக வந்த தீர்ப்புகள் 2-3 சதவீதம் கூட இல்லை. மத்திய அரசு கேம் ஆடுகிறது. அவர்கள் இறக்கிவிட்ட ஒரு ஆள் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்ற எல்லோரும் முயற்சிக்கிறார்கள். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பை விமர்சசிக்கூடாது. போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் தீர்ப்பு முன்னதாக எழுதிவிட்டனர். எனவே அதற்கு பிறகு சாட்சிகளை கொண்டு சென்றால் வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் உண்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆதவ் அர்ஜுனா டெல்லியில் சென்று யாரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை. தமிழக காவல்துறையினர் கைதுக்கு பயந்து அங்கே பதுங்கி இருந்தார். போலீஸ் பிடிக்காது என்று தெரிந்த உடன், சென்னை திரும்பினார். அவர் யாரிடமாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தியோ, புகைப்படங்களோ வெளியானதா? ஊடகங்களாக ஒன்றை கிளப்பிவிட்டு, ஒரு தரகரை பெரிய தலைவராக்கி விடுவார்கள் போல. விஜயை கூட்டணிக்கு அழைக்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். விஜய் கூட்டணி சேர்ந்தால் தேர்தலுக்கு முன்னதாகவே கட்சி அழியும். இல்லாவிட்டால் தேர்தலுக்கு பிறகு கட்சி அழியும். அவ்வளவு தான்.
கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் கிடையாது. எனவே அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை பொருட் படுத்தக்கூடாது. அவருடைய கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. எதிர்க்கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் சட்டப்பேரவையில் பேசுகிறார். அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமைந்தால் 3 பேர் வாயிலும் மண் தான் விழும்.
விஜய், அரசியலில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ. 2027ஆம் ஆண்டு அவருடைய 2வது படம் வெளியாகும். ஜனநாயகன் 2026ல் வெளியாகும். அதற்கு பிறகு ஜனநாயகன் 2 வெளியாகும். பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா உடன், அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியுள்ளார். தேசிய கட்சிகளை பொறுத்தவரை மாநிலத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம் கிடையாது. மேலிடம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் மாநில நிர்வாகிகள் கடமையாகும். தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. நவம்பர், டிசம்பர் மாதத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.