spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிசாகன் To  உதயநிதி! வெள்ளிக்கிழமை நடக்கப்போகும் டிவிஸ்ட்! சஸ்பென்ஸ் வைக்கும் தராசு ஷ்யாம்!

விசாகன் To  உதயநிதி! வெள்ளிக்கிழமை நடக்கப்போகும் டிவிஸ்ட்! சஸ்பென்ஸ் வைக்கும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்து தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் மத்திய அரசின் து நோக்கம் குறித்து  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை 2 நாட்களாக சோதனை மேற்கொண்டது. டாஸ்மாக் சோதனை மற்றும் விசாரணை பெரிய அளவில் கூர்மை பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் ஒரு  பெரிய அளவுக்கான மாறுதல் ஏற்பட போகிறது என்றுதான் தோன்றுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் மென்ஷன் செய்யப்பட்டு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் விவகாரத்தை தேர்தல் வரை எடுத்துச்செல்வதற்கு மத்திய அரசு விரும்புகிறது. அடிப்படையான கேள்வி என்பது ஊழல் நடைபெறுகிறது. அதை மத்திய அரசு விசாரிக்கக் கூடாதா? என்பது ஒரு தரப்பு வாதம். அரசின் நிறுவனத்தின் மீது வரும் முறைகேடு புகார்களை அரசு தொடர்புடைய விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும். 7, 8 வருடங்களுக்கு மேலாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே போன ஆட்சி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசின் ஒரு புலனாய்வு அமைப்பு  இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது என்று ஒருதரப்பு வாதம்.

சாதாரண மக்களிடம் டாஸ்மாக்கில் ஊழல் என்றால், ஆமாம் ஊழல் நடக்கிறது. பாட்டிலுக்கு பணம் கூடுதலாக வாங்குகிறார்கள். பில் போட்டு தர மாட்டார்கள். பார்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாளராக நாம் வேறு விதமாக பார்க்க வேண்டும். பிரிசம்ப்ஷன் என்று ஒன்று உள்ளது. செக் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டால், அவர் மீது செக் மோச வழக்கு பதிவு செய்யப்படும். அதேபோல் மத்திய அரசின் துறை ஒரு நிறுவனமான அமலாக்கத்துறை ஒரு நடவடிக்கை மேற்கொண்டால், அதை சட்டப்பூர்வ நடவடிக்கை என்றுதான் நீங்கள் பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்று நிரூபிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று சொல்கிறார்கள். இது ஒரு சிக்கலான விஷயமாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் காட்டும் ஆர்வத்தை, ஆதாரங்களை சேகரிப்பதில் காட்டுவது இல்லை என்று சொன்னது.

senthilbalaji

செந்தில்பாலாஜி சட்டவிரோத பணப்  பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறை சென்றுவிட்டு வெளியே வந்துவிட்டார். ஆனால் இந்த வழக்கில் அமலாக்கத்துறை அடுத்தக்கட்டமாக என்ன செய்திருக்கிறது?. உச்சநீதிமன்றம் சொல்கிறது இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு தண்டனை கொடுத்திருந்தால், தண்டனையில் ஒரு பகுதியை அவர் ஜாமினிலேயே கழித்துவிட்டார் என்று. அப்படி பட்ட  நிலையில் நீங்கள் அவரை விசாரணை கைதியாகவே வைத்திருக்கிறீர்கள். எப்போதுதான் விசாரணையை முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியது. டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆக மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் கலால் வரியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஜிஎஸ்டியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பழைய பாட்டில்களை உபயோகிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒரு டீக்கடையில் பேசப்படும் வாதமாகும். ஆனால் ஒரு புலனாய்வு அமைப்பு அப்படி பேசக்கூடாது அல்லவா?.

பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுகிறது. கீழ் மட்டத்தில் தொடங்கும் ஊழல் மேல்மட்டம் வரை பகிரப்படுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு. அப்போது ஒரு கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள் என்பதற்கான ஒரு குற்றச்சாட்டு பதிவு ஏற்கனவே நமது எப்.ஐ.ஆரில் உள்ளது. அதுதான் 40 எப்.ஐ.ஆர்கள். இவை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் ஆகும். டாஸ்மாக்கில் ஒரு முறைகேடு நடைபெற்றால் அதை விசாரிக்கிற அதிகாரம் யாரிடம் உள்ளது. துறை அமலாக்கத்துறையிடமா? அல்லது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளா? இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதங்கள் தவறானவை ஆகும். டாஸ்மாக்கில் இயக்குநர் குழு உள்ளது. கூடுதல் தலைமை செயலாளாராக உள்ளவர் அதன் தலைவராக உள்ளார். இதில் 5வது இடத்தில் உள்ளவர் தான் விசாகன். சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அது விசாகன் மூலம் நடைபெற்றுள்ளது என்றால் மற்ற 4 பேருக்கான  பொறுப்பு என்ன?

அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறபோது ஆதாரங்களை கிழித்து நமது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியிலேயே போடுவாமா? விசாகன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அந்த அளவுக்கு புத்தி கூர்மை இல்லாதவரா அவர்? உதயநிதியுடன் புகைப்படம் இருந்தால் என்ன தவறு? அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது என்பது உதயநிதிக்கான டார்கெட் ஆக தான் பார்க்க வேண்டும். யார் அந்த தம்பி? என்பதை தான் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அடிப்படையில் திமுக அரசை வீழ்த்தியாக வேண்டும். தற்போது வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டுவிட்டார்கள். அப்படியும் போதிய வலிமை இல்லை. அப்போது அந்த அணியில் விஜய், பாமக, சீமான் சேர மாட்டார்கள். அப்போது அமலாக்கத்துறை வரும் அல்லவா? உதயநிதியை குறிவைப்பதற்கு காரணம் அவர் அரசியல் செல்வாக்கு மிக்க நபர் என்பதாகும். ரத்திஷ் போன்றவர்களை கைது செய்வதால் என்ன ஆகும். செந்தில் பாலாஜியின் தம்பி என்ன ஆனார்?

உதயநிதி செங்கல்லை தூக்கிக் கொண்டு எய்ம்ஸ் எங்கே என்று பிரச்சாரம் செய்தார். அடுத்த முதல்வராக வருவார் என்று பேச்சுக்கள் உள்ளன. யார் அந்த தம்பி என்று ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிறது. இங்கே எல்லாம் அரசியல்தான். டாஸ்மாக் முறைகேட்டில் உதயநிதி சிக்கினாலும், சிக்காவிட்டாலும் பாஜகவிடம் அதிகாரம் உள்ளது. 2011ல்  2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி கைதுசெய்யப்பட்டனர். இறுதியில் வழக்கில் இருந்து இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2011ல் கைதான கனிமொழி தான் தற்போது ஆபரேஷன் சிந்தூர் தூதுக்குழுவின் தலைவராக உள்ளார். அரசியல்வாதிக்கு பிரச்சினையே கிடையாது. அதிகாரிகளுக்கு தான் பிரச்சினை. விசாகனின் பிரச்சினை அதுதான். இந்த விவகாரத்தில் உதயநிதி சிக்கினாலும், சிக்காவிட்டாலும் அவருக்கு பிரச்சினை கிடையாது.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மவுனமாக இருப்பதும் அரசியலுக்காக தான். அவர் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை திரட்டி வைத்துள்ளார். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது பாஜகவின் நடவடிக்கையாக தான் பார்க்கப்படும்.  திமுக, திமுக கூட்டணி வாக்கு வங்கிதான் வரும். இன்றைய தேதிக்கு அரசியல் என்பது, அல்காரிதம் டிரிவன், மாஸ் மேனுபுலேஷன் தான் முக்கியம்.  நாம் ஒரு விஷயத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். குறிப்பிட்ட விஷயத்திற்கு எதிராக இருக்கிறோம் என்பதுதான் நம்முடைய பொலிடிக்கல் மேனுபுலேஷன் ஆகும். அப்போது என்ன வந்தாலும் அது லாபம். பிறகு எதற்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும். அவர் கருத்து தெரிவித்திருக்க மாட்டார் அல்லவா? இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் தானே.  அவர்கள் குறித்து கவலை இல்லை. எனக்கு வாக்களிப்பவர்களை சிதற விடாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்

 

MUST READ