அம்மாவின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை ஐஐடி மெட்ராஸ் ஈடுபட்டிருக்கிறது . அதில் முதல் கட்ட வெற்றியும் அடைந்திருக்கிறது. இதை செய்ய 14 வர வளர்ச்சி உள்ள மூளையை எடுத்து 0.5 மைக்ரானாக அதை ஸ்லைஸ் பண்ணி அதை பிரிக்கிறார்கள். 0.5 மைக்ரான் என்றால் எவ்வளவு?
நம் தலை முடியின் அளவு 50 மைக்ரான் அப்படியானால் 0.5 என்றால் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மிகவும் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 3d படமாக எடுத்திருக்கிறார்கள்உலகத்திலேயே இதுதான் முதல் முறை . இவ்வளவு நுணுக்கமாக மூளையை ஆராய்ச்சி செய்து 5132 தொகுதிகளாக மூளையை பிரித்திருக்கிறார்கள். அதை உயர்தர 3டி படமாகவும் எடுத்து இருக்கிறார்கள்.
ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் பிரெயின் சென்டர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னேறிய மூளை வரைபட தொழில்நுட்பத்தை பிரைன் மேப்பிங் டெக்னாலஜி ( BRAIN MAPPING TECHNOLOGY ) பயன்படுத்தி பண்ணியிருக்கிறார்கள்.
சரி இதனால் மக்களுக்கு என்ன பயன்? இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னாடி பிரைன் மேப்பிங் என்றால் என்ன என்று பார்க்கலாம். பிரைன் மேப்பிங் டெக்னாலஜி என்பது மூளை மற்றும் முதுகெலும்பு மஜ்ஜையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை படங்கள் மூலம் ஆராயும் ஒரு நுட்பம். இது மூளைப் பகுதிகளை பற்றிய தகவல்களை வரைபடமாக மாற்றி அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறது.
இதெல்லாம் ஓகே, இவ்வளவு நுணுக்கமாக தெரிந்து என்ன பண்ணப் போகிறோம். சின்ன வயதிலேயே ஏற்படுகின்ற மூளை பிரச்சனைகளுக்கு என்ன மாதிரி மருந்து கொடுக்கலாம் என்று முடிவு பண்ணலாம். ஆட்டிசம் AUTISM (மதியிருக்கம்) சார்ந்த குறைபாடுகளில் சில மருத்துவ ரீதியில் ஆன வாய்ப்பை உருவாக்கும்.
வயதானவர்களுக்கும் பார்க்கின்சனின் மருந்துகளை மேம்படுத்த முடியும். ஸ்ட்ரோக் ( STROKE) ஏன் வருகிறது . அது வராமல் இருக்க என்ன பண்ணலாம் ,வந்த பிறகு இப்போது இருக்கும் மருத்துவத்தை விட இன்னும் மேம்பாடு பண்ண முடியுமா என்று கண்டுபிடிக்கலாம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த ஆராய்ச்சியின் மூலம் தெளிவான புரிதல் கிடைக்கும். மேற்கத்திய நாடுகள் இந்த ஆராய்ச்சிக்காக அதிகம் செலவு செய்து வரும் நிலையில், இதில் வெறும் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள்.
இது நம் நாட்டிற்கு ஒரு மைல் கல்.எதிர்காலத்தில் மூளையின் பல புதிர்களை இதன் மூலம் கண்டறிய முடியும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் அதற்கான இணையதள இணைப்புகள் . இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (https://brainportal.humanbrain.in/publicview/index.html).
உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை