விஜயினுடைய அலட்சிய போக்கு தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனதற்கு முதன்மையான காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

கருர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கரூர் கூட்டநெரிசல் மரண விவகாரத்தில் தொடக்கம் முதலே தவறு நடைபெற்றுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. விஜய், 450 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நாமக்கலுக்கு 8.30 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்குகிறார். ஆனால் வீட்டில் இருந்து காலை 8.30 மணிக்கு விஜய் புறப்படுகிறார் என்றால்? அவருக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.
நான் தான் பெரிய ஆள். நான் வருவதற்காக அவர்கள் சாயங்காலம் வரை நிற்பார்கள் என்கிற தெனாவட்டு விஜய்க்கு உள்ளது. விஜயினுடைய அலட்சியம் தான் கரூரில் இத்தனை உயிர்களை பறித்துள்ளது. கலைஞர், ஜெயலலிதா என்று எந்த தலைவராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரம் சொன்னால் வீட்டில் இருந்து கிளம்பி விடுவார்கள். வருகிற வழியில் தொண்டர்கள் குவிந்தால் கால தாமதமாகும். ஆனால் விஜய் வீட்டில் இருந்து புறப்படும்போதே கால தாமதமானால் இது என்ன அலட்சியமா? அல்லது அறியாமையா? கருர் கூட்டநெரிசல் மரணத்திற்கு இதுதான் முழு காரணம்.
இன்றைக்கு பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே நீதிமன்றத்தை நாடி, கரூர் கூட்டநெரிசல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கூட்டநெரிசலுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று ஒப்புக்கொள்வார்களா? ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றால் யார் மீதாவது பழியை போட்டுவிட்டு தப்பிக்க பார்ப்பார்கள். அதனால்தான் வழக்கு தொடருகிறார்கள். இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. விஜய் மீது செருப்பால் அடித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். கூட்டநெரிசலில் 41 பேர் இறந்து விட்டார்கள் என்று கேட்டால் செருப்பை எடுத்து அடித்தார்கள் என்கிறார்கள். செருப்பால் அடித்தோ, கல்லால் தாக்கியோ 41 பேர் இறந்து போய்விட்டனரா?
போலீஸ் தடியடி என்ற ஒன்று நடைபெறாவிட்டால் இன்னும் 100 பேர் இறந்து போய் இருப்பார்கள். இவ்வளவு கூட்டம் இருக்கிறது. ஆம்புலன்சை விட மறுக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்குகிறார்கள் என்கிறபோது போலீஸ் அடிக்காமல் இருக்குமா? கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக போன்றவர்கள் விஜயை ஆதரிக்கின்றனர். எடப்பாடி தன்னுடைய அரசியலில் கடைசி காலகட்டத்தில் இருக்கிறார். தனக்கு விஜய் ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை விமர்சிக்கவில்லை.
கரூர் கூட்டநெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று தவெகவினர் விமர்சிக்கிறார்கள். அவர்தான் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விஷ ஊசி போட்டிருப்பார். அதை தவெகவினர் பார்த்திருப்பார்கள். கூட்டத்தை நடத்திய விஜய் மீதும் தவறு இல்லை. அதில் பங்கேற்றவர்கள் மீதும் தவறு இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத செந்தில் பாலாஜி மீது மட்டும் குற்றம் சுமத்துகிறார்கள்.
தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புகிறார். எடப்பாடிக்கு ஆம்புலன்ஸ் என்றால் என்ன என்றே தெரியாது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது. ஜெயலலிதா மறைவை அடுத்து, பணத்தை கொடுத்து அவர் முதலமைச்சர் ஆனவர். அவர் தன்னை கடைசி காலத்தில் விஜய்தான் காப்பாற்றுவார் என்று நினைக்கிறார். எனவே அவர் விஜயை பகைத்துக்கொள்ள மாட்டார்.
விஜய் கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. களஆய்வில் ஜெனரேட்டர்கள் தான் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவருகிறது. மின்சாரத்தை துண்டிக்க சொன்னது தவெக மாவட்ட செயலாளர் என்பது கட்சியின் தலைவரான விஜய்க்கே தெரியாது. கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் ஒரு படுகொலையாகும். இருந்தபோதும் விஜயை நியாயப்படுத்தி ஸ்டாண்ட் வித் விஜய் என்று டிரெண்ட் செய்கிறார்கள்.
ஒரு பெண் விஜய் கூட்டத்திற்கு குழந்தையை அழைத்துச்சென்று, அந்த குழந்தையும் இறந்து விட்ட நிலையில் விஜயை யாரும் குற்றம் சொல்லாதீர்கள் என்கிறார். அப்போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார். குழந்தை இறந்த தாக்கத்தைவிட விஜய் ஏற்படுத்திய தாக்கம் அவரிடம் இருக்கிறது. இது சைக்கோ மனநிலை தான். இவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.