திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி விமா்சையாக நடைபெற்றுவருகிறது. நிறைவு நாளான நாளை மறுநாள் டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலில் உள்ள கருவறை முன்பு பரணி தீபமும், அதனைத்தொடர்ந்து மாலை திருக்கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊழியர்கள் மூலம் நாளை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
அதேபோல் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடா துணி மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் திருக்கோவிலுக்குள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நாளை மறுநாள் மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடா துணியும் 2668 அடி உயரம் கொண்ட தீபமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…


