134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 134 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்நிலையில் 134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என இல்லம் தேடி கல்வி தொண்டு நிறுவன பணிப்பெண்களைக் கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டது.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!
இந்த தகவல் சேகரிப்பு முகாமில் முதல் கட்டமாக வஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 195 பெண்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 195 பெண்களும், மூன்றாம் கட்டமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 134 பெண்களும் பணிபுரிந்தனர்.
மேலும் நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் ஊதியமாக தெரிவித்திருந்த நிலையில், இதில் பணிபுரிந்த பெண்களுக்கு இன்று ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் கொடுக்கப்பட்டு, பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊதியம் பெற்ற பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.