Homeசெய்திகள்ஆவடி27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்

27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்

-

 

ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட

வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டு மூழ்கி இருக்கிறது. மேலும் நீர் இறைக்கும் ஜெனரேட்டர் இல்லாததால் சுரங்கப்பாதையில் மழை நீரை  எடுக்க முடியாமல் உள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

தற்போது தொடர்ந்து பெய்து வர மழையால் ஏழு சென்டிமீட்டர் அளவு மழைநீர் வெள்ளம் தொட்டுக் கொண்டு மூழ்கி இருக்கிறது

ஆவடி காமராஜர் நகர் இணைப்பு சாலை வி ஜி என்  காஸ்மோஸ்  [VGN KOSMOS] பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே போன்று ஆவடி காமராஜர் நகர் ஆற்றுப்பாலத்தில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆவடி காமராஜர் நகர் ஆற்றுப்பாலத்தில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் நீர் முட்டிக்கால் அளவு சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். வீடுகளுக்குள்  நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் நீர் முட்டிக்கால் அளவு சூழ்ந்துள்ளது

ஆவடி காவல் நிலையம் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. காவல்நிலையத்திற்குள் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளது.

ஆவடி காவல் நிலையம் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது

ஆவடி ரயில் நிலைய தண்டவாளங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. பயணிகளின் போக்குவரத்து மிக குறைவாக காணப்படுகிறது. இருந்தும் ரயில் ஞாயிறு அட்டவணைப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

ஆவடி ரயில் நிலைய தண்டவாளங்கள்

ஆவடி பேருந்து பணிமனை முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது பேருந்துகள் பணிமனையில் உள்ளே நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.

ஆவடி பேருந்து பணிமனை முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது

இதனால் போக்குவரத்து பேருந்துகள் சி.டி.எச் பிரதான சாலையில் இயக்கப் பட்டு வருகிறது

MUST READ