ஆவடி மாநகராட்சியுடன் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகள் !
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சி 19 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர்.
வானகரம் ஐயப்பாக்கம் நெமிலிச்சேரி, அடையாளம் பட்டு, நடுக்குத்தகை, காட்டுப் பாக்கம், சென்னீர்குப்பம் , வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரம் மேல், பனவீட்டு தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, மோரை, வெள்ளனூர், பாலவேடு, மேப்பூர், கருணகரச்சேரி ஆகிய 19 ஊராட்சிகளை இணைத்து முதற்கட்ட அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த இணைப்பின் படி ஆவடி மாநகராட்சி 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவடைகிறது.
புதிதாக இனைக்கப்படும் 19 கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகை 1,77,663 ஆகும். திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளின் ஊராட்சிகளின் மக்கள் தொகை 6,95,212 ஆகும். ஆவடி மாநகராட்சியின் மக்கள் தொகை 3,45,996 ஆகும். இவை அனைத்தையும் இனைத்தால் மொத்தம் 12 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டி.கார்த்திகேயன் கூறியதாவது ,பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்காலம் 2024 இறுதி வரை இருப்பதால், அதன் பிறகு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் பஞ்சாயத்துகள் இணைக்கப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த மேம்படுத்தல் (Up-gradation) எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
இதே போன்று நேற்று தமிழ்நாடு முழுக்க பல மாநகராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம் & வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.