- Advertisement -
ஆவடி சுற்றுப்பகுதியில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை.
ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது, ஆவடி சுற்றுப்பகுதிகளான பட்டாபிராம் திருநின்றவூர் பூந்தமல்லி அம்பத்தூர் திருமுல்லைவாயல்போன்ற பகுதிகளான பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கன மழை இரவு நேரங்களில் கடந்த இரண்டு நாட்களாக பொழிந்து வருகிறது.
சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ – தமிழக அரசு
காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரண்டு தினங்களாக நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது, இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் கனமழை காரணமாக ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.