Homeசெய்திகள்ஆவடிஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர் 19.05.2023- அன்று புகார் ஒன்றினை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

தன் சொந்த உழைப்பில் அம்பத்தூர், கள்ளிக்குப்பம்,கொரட்டுர் கிராமத்தில் ஸ்ரீ மூகாம்பிகை நகரில் பிளாட் எண்.12 மற்றும் 13-ல் 4800 சதுரடி இடத்தினை அதன் உரிமையாளர் திரு.திருநாவுக்கரசு மற்றும் திரு.கேசவன் என்பவர்களின் பொது அதிகார முகவரான திரு.சுப்ரமணியன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்திருந்ததாகவும், மேற்படி நிலத்தின் ஒரு பகுதியை விற்கவும், மீதியுள்ள இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டி வில்லங்க சான்று போட்டு பார்த்ததில் தன்னுடைய பெயரை ராஜாராமன் என போலியாக போட்டு ஆள்மாறாட்ட நபர்களின் மூலம் போலியாக ஆவணம் தயாரித்து ஜோதி என்பவரின் மகள் விஜி தனக்கு தங்கை எனக்கூறி செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

மேலும் விஜி என்பவர் மேற்படி சொத்தை மூன்று பகுதிகளாக பிரித்து கொளத்தூர் திருமலை நகர் எண்.118, கிழக்கு மெயின் ரோடு, சுவாமி கொண்டய்யா அவர்களின் மகன் கொத்த சுப்புராயுடு என்பவருக்கு 1237 சதுரடியும், ஆந்திரமாநிலம், மதில்மேடு, பொன்னியம்மன் தெரு, சீனிவாச ரெட்டி அவர்களின் மகன் P.S.பழனி என்பவருக்கு 2280 சதுரடி நிலத்தையும் மீதியிருந்த 1276 சதுரடி நிலத்தை சென்னை, கீழ்பாக்கம், அஜய் ஆர்சாட், 4வது மாடி, பிளாட் எண் 4ல் வசித்து வந்த குமாரகிருஷ்ணன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார், இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் ஆகும்.

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ள ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்களின் உத்தரவின்பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் திரு.P.பெருமாள் மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் ஆகியோர்களின் மேற்பர்வையில், காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.ஜெயச்சந்திரன் ஆகியோர்களின் தலைமையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இன்று அதிரடியாக பூஞ்சோலை, வயது-36,மற்றும்  பிரேம்குமார். வயது-36, ஆகியவர்களை திருமுல்லைவாயல் CTH Road சிக்னல் அருகே வைத்து கைது செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு நிலப்பிரச்சனை தீர்வு பிரிவு-2 காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

MUST READ