Homeசெய்திகள்ஆவடிபங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி - மேலும் ஒருவர் கைது!

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!

-

- Advertisement -

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த முகமது அமீன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார்.  அதில் கூறியிருப்பதாவது, கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (41) மற்றும் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (42) ஆகிய இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் அட்வெடேஸ்மெண்ட் அண்ட் கன்சல்டிங் என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏழு நாட்டில் ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வதாகவும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் நான்கு சதவீதம் வட்டி அளிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் ஒரு நபரை டிரேடிங் சேர்த்து விட்டால் 10% கமிஷன் தருவதாக கூறினார்.

அதன் பேரில், எனக்கு நண்பர்கள், உறவினர்கள் என 110 பத்து நபர்களை ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் சேர்த்தேன். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து மொத்தம் 450 நபர்கள் மேல் ருபாய் 65 கோடி 98 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த பணத்தை விஜய் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் க்ரிப்டோ கரன்சியாக மாற்றி, அவர்கள் நண்பர்கள் ரவிக்குமார், சந்தோஷ் மூலம் போலியான ஆன்லைன் ஆப் ஒன்று உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என’ அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர் உத்தரவின் பேரில் கூடுதல் துணை ஆணையாளர் ஸ்டீபன், துணை ஆணையர் பெருமாள் தலைமையில் ஆய்வாளர் சுபாஷினி மற்றும் காவலர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் விஜயை தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 14ம் தேதி தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்து கடந்த 21 ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் வேலூர், காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (39) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ