அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால், அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி நிறுவனங்களை மூழ்கடித்துள்ளது. இதனால் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளது. கழுத்தளவு நீரில் பயணிக்கும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
மழை கடும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த KKR நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் அவர்கள் இது பற்றி கூறும்போது, “ எனது தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பு புதிய இயந்திரங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் உலக முதலீடு மாநாட்டில் 340 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தேன். இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு தன்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதே போல். அம்பத்தூரில் உள்ள பட்டரவாக்கம் வடக்கு பகுதி உள்ள இங்கு உள்ள தொழிற்சாலைகளில் 300 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். அதே போல 2015ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தை விட தற்போது கடந்த 2 நாட்கள் பெய்த மழை வெள்ளத்தால் இங்குள்ள அனைத்து தொழிற்சால்களையும் வெள்ளத்தால் மூழ்கடித்துள்ளது. குறிப்பாக ஆவடி பருத்திப்பட்டு எரி வழியாக அயப்பாக்கம் வந்து பின்பு அம்பத்தூர் ஏரி வந்தடையும். அந்த மழை வெள்ளம் தற்பொழுது திறந்து விடப்பட்டதால் அம்பத்தூர் எஸ்டேட் வடக்கு பகுதி முழுதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொளத்தூர் செல்லக்கூடிய வெள்ளம் தற்போது இந்த வழியாக திறந்து விட்டார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொழிற்சாலை நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்தாலும் இதுவரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், சிட்கோ நிறுவாகம் , தொழிற்சாலை துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை யாரும் கவனிக்க வில்லை என வேதனை தெரிவித்தார்.
எனவே அரசு துறை அதிகாரிகள் இதை கவனம் கொண்டு பாதிப்படைந்த தொழிற்சாலைகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.