- Advertisement -
ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது- சிறுமி உள்ளிட்ட 3பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் நேற்று இரவு தனது வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ் கசிவின் காரணமாக எதிர்பாராத விதத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ரோஜா, அவரது மகன் சங்கர் மற்றும் சங்கரின் மகள் கீர்த்திகா உள்ளிட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதில் 3 வயது சிறுவன் கௌதமுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி எச்விஎப் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் ஏற்பட்ட அனைவரும் சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.