ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்
சென்னை ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனப் (CVRDE) பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் முன்னிலையில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அப்போது பாதுகாப்புத் துறையில் மாறி வரும் நிலைமைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார். விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர், இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மிகப் பெரும் பங்களிப்பு செய்த முன்னாள் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பொன்விழாவை முன்னிட்டு போர் வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய தளவாடங்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை விருந்தினராகவும் ஆயுதங்கள் மற்றும் போர் பொறியியல் பிரிவில் தலைமை இயக்குநர் பேராசிரியர் பிரதீக் கிஷோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். டிஆர்டிஓ தலைமையக / ஆய்வக இயக்குநர்கள், ராணுவம் மற்றும் கப்பற்படை அதிகாரிகள், மத்திய மாநில அரசு அதிகாரிகள், தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.