Homeசெய்திகள்ஆவடிஅரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி

அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி

-

ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து  போதிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து தருமாறு  பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் அரசு ஆரம்பம் சுகாதார நிலையம் உள்ளது..அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், உடல்நலம் குறைவில்லாத அவசர காலங்களில் அந்த சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி......அந்த சுகாதார நிலையத்தில் பணி மருத்துவர் இல்லை, ஒரு செவிலியரும் ஒரு துணை செவிலியரும் மட்டுமே உள்ளனர்.மருத்துவர் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் செவிலியர் பற்றாக்குறை உள்ள காரணத்தினாலும் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் வெகு நேரம் மருத்துவமனையில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவதியும் உள்ளது.

நோயாளிகள் இரத்த பரிசோதனை செய்வதற்கோ, பிற பரிசோதனைகள் செய்வதற்கோ, வசதிகள் இல்லாத காரணத்தினால் அவசர காலங்களில், ஆவடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.ஆவடி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத, அதே அவல நிலை உள்ளதாகவும், பணியின் போது உறங்கிக் கொண்டிருந்த அவசரகால மருத்துவரை அணுகி கேட்டபோது தான் இரவு பகல் 24-மணிநேரம் பணி செய்ததாகவும் தன்னை மாற்றுவதற்கான பணியாளர் வராத காரணத்தினால் தான் உடல் சோர்வின் காரணமாக உறங்கியதாக கவலையாக தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி......குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் என பல பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இல்லாமல் மருத்துவமனை இயங்குவதும், மேலும் போதிய அடிப்படை வசதி இல்லாத நிலை இருப்பதாலும், பொதுமக்களுக்கு பெரும் அவதி ஏற்படுகிறது.

மேலும் மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு முறையாக இல்லாமல் மளிகை கடை அட்டையில் சீட்டு பதிந்து கொடுப்பதும் நகைச்சுவையாக உள்ளது..

எனவே அரசு ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மற்றும் மருத்துவர், செவிலியர் போதுமான பணிகளுக்கு அமர்த்திடவும், பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்…

MUST READ