ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.
சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி கௌரவித்தார்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா போலீஸ் கண்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாரம்பரிய உடையில் மனைவியுடன் கலந்து கொண்டார். அவர்களை மேளம், தாளம் முழங்க காவல் ஆணையர் சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விழாவில் ஆவடி ஆணையரக காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். இதையடுத்து, டி.ஜி.பி சங்கர் ஜிவால், ஆவடி ஆணையர் சங்கர் குடும்பத்தினருடன் புதுபானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில், கயிறு இழுத்தல், உறி அடித்தல்,ஸ்லொவ் சைக்கிள், கோலம் போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதேபோல், பறை இசை,மெல்லிசை கச்சேரி, செண்டை மேளம் என காவலர்கள் ஆட்டம் பாட்டம் என உற்சாகம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய செங்குன்றம் உதவி ஆணையர், ஆவடி காவல் ஆய்வாளர், அம்பத்தூர் உதவி ஆய்வாளர் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.