Homeசெய்திகள்ஆவடிஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை

-

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆவடி ரயில் நிலையம், ஆவடி மார்க்கெட், ஆவடி துணை ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகராட்சி அலுவலகம் உள்ளன.

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆ வடி மாநகராட்சி

ஆவடி மார்க்கெட் பேருந்து நிறுத்தம் வழியாக ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், திருமுல்லைவாயல், கள்ளிக்குப்பம், செங்குன்றம், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு தடத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆவடி மார்க்கெட் பகுதியில் இருவழி பேருந்து நிறுத்தம் எதிர் எதிர் நிகழ்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் மழையிலும் வெயிலிலும் அவதி படுகின்றனர். ஆவடி வீட்டு வசதி வாரிய பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர், ஆவடி மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.

41வது வார்டு சமூக ஆர்வலர் வி.சந்திரசேகர் கூறுயுள்ளதாவது ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் கேஸ் நிறுவனம், இரும்பு குழாய்களை புதைத்து வருவதால் ஆங்காங்கே குழிகள் தோண்டி சாலை மீண்டும் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் இருபுறமும் பேருந்துகள் செல்ல பரபரப்பான அலுவலக நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

எனவே பூந்தமல்லியில் இருந்து வரும் பேருந்துகள் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 60 அடி சாலை வழியாக நுழைந்து ஆவடி ஜே பி எஸ்டேட் வழியாக பொன்னு சூப்பர் பஜார் உள்ள 60 அடி சாலையில் இணைந்தால் ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் ஆவடி மார்க்கெட், ஆவடி துணை ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கலாம்.

அதே போல் பூவிருந்தவல்லியில் இருந்து ஆவடி வரும் பேருந்துகள், பொன்னு சூப்பர் பஜார் அல்லது ஆவடி மாநகராட்சி அருகே புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை அமைத்தால், பயணியர், பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் அனைவரும் சிரமத்திலிருந்து மகிழ்ச்சிக்குள்ளாவர்.

எனவே, இங்கு பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

MUST READ