spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

-

- Advertisement -

ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட  100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது ஆவடி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

we-r-hiring

ஆவடி காவல் ஆணையரகம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வசந்தம் டீக்கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடியாக சோதனைநடத்தி ஆவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள வசந்தம் டீ ஸ்டாலில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

மேலும் டீக்கடை உரிமையாளர் இது போன்று தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது நிலையில். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வசந்தம் டீ கடையை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் திரு சங்கர் IPS  அவர்கள்  எச்சரித்துள்ளார்.

MUST READ