- Advertisement -
சென்னை திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட சேக்காடு சுரங்கப்பாதை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைகிறது, இணைக்கப்பட்ட சாலையை சரியாக அமைக்கப்படாததால் தார் சாலை மேடும் பள்ளமாகவும் இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை அருகே கற்கள் வைத்திருப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே சாலையில் இருக்கும் கற்களை அகற்றி சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.