spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக் போஸ்டில் உள்ள தெற்காசியாவிலேயே 40 ஆண்டுகளாக ஓங்கி உயர்ந்து நிற்கும் மாவீரர் நிணைவுத்தூணில் வீரவணக்க நிகழ்ச்சி நேற்று இரவு (27.11.2023) நடைபெற்றது. இங்கு  அமைந்துள்ள மாவீரர் நிணைவுத்தூணில்  ஈழப்போரில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

we-r-hiring

அதில் மலர் வணக்கமும், சுடர் வணக்கமும், இனம் காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒருநிமிடம் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவீரர் நினைவுத்தூண் செங்காந்தள் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தோழர் சுந்தர மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி காத்தவராயன் மற்றும் மானிட மனம் சேகரன் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்,மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

MUST READ