spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை: அரசு பேருந்து விபத்து - வாலிபர் பலி

சென்னை: அரசு பேருந்து விபத்து – வாலிபர் பலி

-

- Advertisement -

சென்னை: அரசு பேருந்து விபத்து - வாலிபர் பலிசென்னையில் அரசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார்.

சென்னை காசிமேட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த மாநகர பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

we-r-hiring

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அசாருதீன்(29). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம் இல் பணியாற்று வருகிறார்.

இன்று காலை இருசக்கர வாகனத்தில் காசிமேடு பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.

பின்னால் வந்த பிராட்வேயில் இருந்து எண்ணூர் செல்லும் தடம் எண் 4 அரசு பேருந்து அசாருதீன் தலை மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து காரணமாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ